இயக்குநர் அவதாரம் எடுத்த ஸ்டன்ட் சில்வா.. சமுத்திரகனி பட ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்த தனுஷ்!
சென்னை: ஒரு பக்கம் பவர்ஃபுல்லான கதாபாத்திரம் மற்றொரு பக்கம் ஹீரோ என தனிக்காட்டு ராஜாவாக கலக்கி வருகிறார் சமுத்திரகனி.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான வினோதய சித்தம் திரைப்படம் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று மிகப்பெரிய ஹிட் அடித்தது.
இந்நிலையில், ஜி5 ஒடிடி தளத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார் சமுத்திரகனி.

வெல்வோம்
வெல்வோம் எனும் முழக்கத்துடன் செயலாற்றி வரும் நடிகர் சமுத்திரகனி தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களிலும் ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான ஏலே, வினோதய சித்தம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சமுத்திரகனி.

தலைவியில் வில்லன்
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான ஜெயலலிதாவின் பயோபிக் திரைப்படத்தில் ஆர்.எம். வீரப்பன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் சமுத்திரகனி. குணசித்திர கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாகவும் சமுத்திரகனி தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கலக்கி வருகிறார்.

ராஜமெளலி படத்தில்
பாகுபலி படத்தில் நடிகர் சத்யராஜ் கட்டப்பா கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நிலையில், ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் நடிகர் சமுத்திரகனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வரும் 2022ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி ராஜமெளலி இயக்கி உள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியானால் சமுத்திரகனியின் மவுசு இன்னமும் அதிகரிக்கும்.

மரண பயத்தை காட்டிட்ட பரமா
இயக்குநர் சமுத்திரகனி இயக்கி நடித்த வினோதய சித்தம் திரைப்படம் ஜி5 ஒடிடி தளத்தில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. காலனாக அந்த படத்தில் நடித்த சமுத்திரகனி மற்றும் செத்து பிழைக்கும் கதாபாத்திரத்தில் நடித்த தம்பி ராமையாவுக்கும் ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்தன. அந்த படத்தை பார்த்த பலரும் சுப்ரமணியபுரம் படத்தின் வசனமான மரண பயத்தை காட்டிட்ட பரமா என்றே சொல்ல ஆரம்பித்தனர்.

சித்திரைச் செவ்வானம்
குறைந்த பட்ஜெட்டில் நல்ல கதைகளை கொண்டு ஏகப்பட்ட படங்கள் உருவாகி ஒடிடி தளங்களில் வெளியாகி நல்ல வசூலையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. வினோதய சித்தம் படம் தந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஜி5 ஒடிடி தளத்தில் சமுத்திரகனி நடிப்பில் உருவாகி உள்ள சித்திரைச் செவ்வானம் எனும் படம் ரிலீசாக உள்ளது.

ஸ்டன்ட் சில்வா இயக்கத்தில்
பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா தான் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்கிற தகவலே ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விதமாக உள்ளது. கல்லுக்குள் ஈரம் என்பது போல ஸ்டன் சில்வாவிடம் இருந்து சித்திரைச் செவ்வானம் என்கிற டைட்டிலில் படம் வெளியாவதே சூப்பரான விஷயம் தான்.

தனுஷ் ரிலீஸ்
வேலையில்லா பட்டதாரி, வேலையில்லா பட்டதாரி 2, வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடித்த சமுத்திரகனி நடிப்பில் உருவாகி உள்ள சித்திரைச் செவ்வானம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். தனது நண்பர் ஸ்டன்ட் சில்வாவுக்கும் வாழ்த்து கூறியுள்ளார். வரும் டிசம்பர் 3ம் தேதி ஜி5 ஒடிடி தளத்தில் இந்த படம் வெளியாகிறது. இயக்குநர் விஜய் தயாரிப்பில் வெளியாக உள்ள இந்த படத்தில் பூஜா கண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











