தனுஷ் எடுத்த முடிவு.. வடசென்னை 2 வருவது உறுதி.. இந்த முறை மிஸ் ஆகாது.. ஷூட்டிங் எப்போ தெரியுமா?
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாக இரண்டு படங்கள் தயாராக உள்ளது. இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் சத்தமில்லாமல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும் அவர் அடுத்தடுத்து படங்களில் நடிப்பது, கமிட் ஆவது என்பதில் செம பிஸியாக உள்ளார். அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வட சென்னை 2 படம் எப்போது வரும் என்ற கேள்வி ரசிகர்களுக்கு இருந்து வந்தது. இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக தனுஷ் தற்போது அட்டகாசமான சம்பவத்தை செய்துள்ளார்.
வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி என்றாலே ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சினிமா பிரியர்களுக்கே மகிழ்ச்சிதான். இவர்கள் கூட்டணியில் ஒரு படம் ரிலீஸ் ஆகிறது என்றால், இந்த படத்திற்கான தேசிய விருது கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது எனக் கூறும் அளவிற்கு அவர்கள் இருவரும் இணைந்து தரமான படங்களை கொடுத்து வருகிறார்கள்.
இதுவரை இவர்கள் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை மற்றும் அசுரன் என நான்கு படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் இவர்கள் கூட்டணியில் எப்போது வடசென்னை 2 உருவாகும் என்ற கேள்வி ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல் தனுஷ் நடிப்பில் ஏற்கனவே வெளியான புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாக கூறப்படுகிறது. ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தனுஷ் - வெற்றிமாறன்: இப்படியான நிலையில் ரசிகர்கள் வடசென்னை 2 படத்தை மட்டும் அதிக ஆர்வத்துடன் கேட்க காரணம் அந்த படத்தின் திரைக்கதை. மேலும் படத்தின் கிளைமாக்ஸ், அன்புவின் எழுச்சி என இயக்குநர் வெற்றிமாறன் படத்தை முடித்திருப்பதால் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உண்டாகி விட்டது. இதனால் வெற்றி மாறனை எப்போது ரசிகர்கள் சந்தித்தாலும் வடசென்னை 2 படம் குறித்து கேள்விகள் எழுப்பாமல் இருப்பதில்லை.
வடசென்னை: ஒரு கட்டத்தில் வடசென்னை 2 படத்தை எடுக்கும் திட்டத்தை வெற்றிமாறன் கைவிட்டுவிட்டதாக தகவல்கள் வெளியானது. அப்படி இருக்கும்போது தற்போது வட சென்னை 2 படத்தை தனுஷ் தூசு தட்ட ஆரம்பித்துள்ளார். அதாவது, தனுஷ் நேரடியாக வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார். அவர்களின் சந்திப்பில் வடசென்னை 2 படம் குறித்து பேசப்பட்டு தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் அடுத்த ஆண்டு அதாவது 2026 இறுதி அல்லது 2027ஆம் ஆண்டு தொடக்கத்தில் வடசென்னை 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டாம் பாகம்: மேலும் வட சென்னை 2 படத்தை எடுத்த பின்னர், தனுஷ் தனது அண்ணன் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 படத்தில் நடிக்க உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து புதுப்பேட்டை 2 படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது. விஷயத்தை கேள்விப்பட்ட தனுஷ் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











