திரிவிக்ரமை அடிச்சு ஓடவிடுறோம்.. தனுஷ் படத்துக்கு என்னமா ஆதரவு குவியுது.. ஷூட்டிங் எப்போ ஸ்டார்ட் பண்றீங்க?
சென்னை: நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம் கூட்டணியில் உருவாகவுள்ள படம் குறித்த அறிவிப்பை கடந்த வாரத்தில் வெளியிட்டது. இந்த படம் முருகனின் கதையை மையமாக கொண்டது என்பதால், படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சியோ தனது எக்ஸ் பக்கத்தில், வடக்கே பிறந்து, மத்தியில் வளர்ந்து மற்றும் தெற்கில் குடி கொண்டவர் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு தமிழ்நாட்டில் இருந்தும் தமிழ் திரை உலகில் இருந்துமே எதிர்ப்பு கிளம்பியது. அதாவது முருகர் தமிழ் கடவுள் அப்படி இருக்கையில், அவர் வடக்கே பிறந்தவர் என்று எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
இந்த கேள்விக்கு வாதம் பிரதி வாதம் என அனல் பறக்க சமூக வலைதளங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்படி இருக்கையில், எழுத்தாளர் அறிவுமதி எழுதிய தமிழ் முருகன் என்ற ஆய்வு புத்தகத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட உள்ள படமாக தமிழ் முருகன் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதில் பலருக்கும் ஷாக் மீது ஷாக் கொடுக்கும் தகவல் என்றால் அது தனுஷ் கதாநாயகனாக நடிக்க, வெற்றிமாறன் இயக்குகிறார் என்பதுதான்.

திரையுலகில் ஆதரவு: இதனால் இணையத்தில் பலரும் வெற்றிமாறன், தனுஷ் மற்றும் அறிவு மதி என மூவரையும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். மேலும் வழக்கமாக ஒரு நடிகரின் படம் குறித்த பொதுவான அறிவிப்பு வருகிறது என்றால் அதை மற்ற நடிகர்கள் பகிர்ந்து ஆதரிப்பது என்பது அனைத்து படங்களுக்கும் நடக்காது. ஆனால் தமிழ் முருகன் படத்திற்கு மொத்த தமிழ் திரை உலகமும் இணைந்து வாழ்த்து மடல் தான் எழுதவில்லை. மற்றபடி தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தனுஷ் ரசிகர்கள் ஆர்வம்: திரை உலகம் தான் இப்படி உள்ளது என்றால், தனுஷ் ரசிகர்களோ ஒரு படி மேலே சென்று, எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இந்த படம் வெளியாகும் போது தமிழ் சினிமாவின் மொத்த பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டுகளும் தவிடுபொடி ஆகும் என்று பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல் சில ரசிகர்களோ, தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு காட்சியைப் பகிர்ந்து ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் திரிவிக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தை ட்ரோல் செய்யத் தொடங்கிவிட்டனர். மொத்தத்தில் தமிழ் முருகனைக் கொண்டு உள்நோக்கம் கொண்ட கற்பிதங்களை அடித்து விரட்டுவோம் என்று பதிவிட்டு வருகிறார்கள். மேலும் ஷூட்டிங்கை எப்போது தொடங்குகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications