தனுசிடம் புதிய கதை சொன்னாரா வெற்றி?.. டிரெண்ட்டாகும் புகைப்படம்

சென்னை : அசுரன் 100 வது நாள் கொண்டாட்டத்தின் போதே தனுசிடம் வெற்றிமாறன் புதிய கதை ஒன்றை கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கி சமீபத்தில் நூறாவது நாள் கொண்டாடிய படம் தான் அசுரன். இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்து நூறாவது நாளை வெற்றி கரமாக கடந்து இருக்கிறது .நூறாவது நாளில் ரசிகர்களுக்காக ஸ்பெஷல் ஷோ சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் போடபட்டது .

Dhanush Vetrimarans new film?

இந்த படத்தை நூறாவது நாளில் ரசிகர்களுடன் பார்க்க படக்குழு ரோகினி திரையரங்கம் வந்திருந்தது. ரசிகர்கள் ஆரவாரமாக படக்குழுவை வாழ்த்தினர். அப்போது எடுக்கபட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆனது. பல புகைப்படங்களை படக்குழுவினரும் தற்போது வெளியிட்டு உள்ளனர் ரசிகர்களும் அதனை பகிர்ந்து வருகின்றனர்.

Dhanush Vetrimarans new film?

ரோகினி திரையரங்கமும் அவர்கள் சார்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவேற்றி சிலவற்றை கூறியிருந்தது. அந்த புகைப்படத்தில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரும் தீவிரமாக பேசிக்கொண்டு இருப்பது போல இருந்தது அந்த புகைப்படம். மற்ற படக்குழுவினருக்கு திரையரங்கிற்கு வந்திருந்தாலும் தனுஷ் மற்றும் வெற்றிமாறனின் அந்த புகைப்படத்தை மட்டும் பதிவேற்றியது ரோகினி திரையரங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் .

Recommended Video

Vekkai Novel Writer Poomani about Asuran | வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்!

தனுசிடம் வெற்றிமாறன் அசுரனின் நூறாவது நாளில் வைத்து புதிய கதை ஒன்றை கூறியிருக்கிறாரா என்பது போல கூறியிருந்தது. இந்த பதிவை போட்டு விட்டு தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கு அந்த செய்தியை டேக் செய்து இருந்தது ரோகினி திரையரங்கு ட்விட்டர் பக்கம் .

Dhanush Vetrimarans new film?

தனுஷ் மற்றும் வெற்றி இருவரும் வடசென்னை 2 படத்திற்காக கட்டாயம் இணைய வாய்ப்பு உண்டு அதனை பற்றி வெற்றிமாறன் தனுசிடம் பேசிக்கொண்டு இருந்தாரா அல்லது புதிய படத்தின் கதையை கூறிகொண்டு இருந்தாரா என்று ரசிகர்கள் கமெண்டுகளில் கூறி வருகின்றனர் .

Dhanush Vetrimarans new film?

என்னவாக இருந்தால் என்ன தனுஷ் வெற்றி கூட்டணி ஒன்றே போதும் என்பது தான் பலரின் எதிர்பார்ப்பு .இதுவரை நான்கு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். நான்கு படங்களும் தமிழ் சினிமாவின் மிக முக்கிய படங்களாகும். இனிமேலும் அதே போல படம் என்றால் கட்டாயம் ரசிகர்கள் மகிழ்ச்சியாகி விடுவார்கள் .

தனுஷ் தற்போது நெல்லையில் விறுவிறுப்பாக நடந்து வரும் மாரி செல்லராஜின் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் சூரியை வைத்து இயக்கி வருகிறார். அடுத்தாக சூர்யா கலைப்புலி எஸ்.தாணு மற்றும் ஜீவி கூட்டணியில் விரைவில் இணைய உள்ளார் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X