Dhanush: D 50-ல் இருந்து விலகிய விஷ்ணு விஷால்... தனுஷின் மெயின் விக்கெட்டை வீழ்த்திய ஐஸ்வர்யா ரஜினி

சென்னை: தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் D 50 படத்தை இயக்கவும் தனுஷ் பிளான் போட்டுள்ளார்.

இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது அதற்கு வாய்ப்பில்லை என தெரிகிறது.

 Dhanush: Vishnu Vishal Has Revealed That He Is Not Part Of Dhanushs D 50 Film

தனுஷின் D 50-ல் இருந்து விலகிய விஷ்ணு விஷால்:தனுஷ் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகும் படத்திலும் தனுஷ் நடிக்கவுள்ளார்.

இன்னொரு பக்கம் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் D 50 படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் தனுஷ். இந்தப் படத்தை அவரே இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. பவர் பாண்டி படத்திற்குப் பின்னர் தனுஷ் இயக்கும் இரண்டாவது படமாக D 50 உருவாகவுள்ளது. தனுஷ் - சன் பிக்சர்ஸ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகும் D 50 படத்தில் தனுஷுடன் விஷ்ணு விஷால், எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் படத்தின் முதல் அப்டேட் வெளியான போதே, விஷ்ணு விஷால் தான் ஹீரோ என சொல்லப்பட்டது. ஆனால் அப்போது அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தில் கமிட் ஆகியிருந்தார்.

 Dhanush: Vishnu Vishal Has Revealed That He Is Not Part Of Dhanushs D 50 Film

லால் சலாம் படத்தில் இருந்து அவரை வெளியேற வைக்கவே D 50-ல் விஷ்ணு விஷாலை ஹீரோவாக்க தனுஷ் முயற்சிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், விஷ்ணு விஷால் லால் சலாம் படத்தில் இருந்து வெளியேறவில்லை என்றும், தனது போர்ஷனை முடித்துவிட்டார் என தெரிகிறது. இருப்பினும் தனுஷின் D 50 படத்தில் நடிக்க கால்ஷீட் இல்லை என விஷ்ணு விஷால் கூறிவிட்டாராம்.

லால் சலாம் படத்தில் நடித்து முடித்துவிட்டாலும் D 50-ல் நடிக்க விஷ்ணு விஷால் நோ சொன்னது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் விஷ்ணு விஷால் நோ சொன்னதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காரணமில்லை எனவும் சொல்லப்படுகிறது. இதனிடையே D 50 படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன் ஆகியோர் தனுஷின் சகோதரர்களாக நடிக்கவுள்ளார்களாம். மேலும், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் லீடிங் ரோலில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X