தியேட்டர் தியேட்டரா போய் திருச்சிற்றம்பலம் படம் பார்க்கும் தனுஷ்.. செம ஹேப்பியில் இருக்காரு போல!
சென்னை: கர்ணன் படத்திற்கு பிறகு தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், அட்ரங்கி ரே மற்றும் மாறன் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியாகின.
Recommended Video
ஆனால், அந்த மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், இந்த வாரம் தியேட்டரில் வெளியான திருச்சிற்றம்பலம் ரசிகர்கள் மனங்களை வெகுவாக கவர்ந்து ஹிட் அடித்துள்ளது.

தியேட்டரில் தனுஷ்
திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் காட்சியை ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார் நடிகர் தனுஷ். அனிருத், ராஷி கன்னா, தனுஷின் மகன்கள் உள்ளிட்டோரும் முதல் நாள் தியேட்டரில் திருச்சிற்றம்பலம் படத்தை பார்த்து ரசித்தனர். ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் கையசைத்து, வணக்கம் தெரிவித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகின.

நடிகையுடன் ஓட்டம்
மகனை விட்டு விட்டு தியேட்டரில் இருந்து நடிகை ராஷி கன்னாவின் கையை பிடித்துக் கொண்டு நடிகர் தனுஷ் ரசிகர்களின் கூட்டத்தில் சிக்காமல் ஓடிய வீடியோக்களும் முதல் நாளிலேயே வெளியாகி டிரெண்டாகின. கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என கலக்கும் தனுஷை பார்த்ததுமே ரசிகர்கள் கூட்டம் அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறி அலைமோதியதே அதற்கு காரணம்.

தியேட்டர் தியேட்டரா
திருச்சிற்றம்பலம் படத்தை பார்த்து சிரித்து, அழுது ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி வரும் நிலையில், படத்துக்கு மிகப்பெரிய வசூல் கிடைத்துள்ளது. இதனால், சந்தோஷமடைந்துள்ள நடிகர் தனுஷ் தியேட்டரில் ரசிகர்கள் படத்தை எப்படி என்ஜாய் பண்றாங்க என்பதை நேரிலேயே தியேட்டர் தியேட்டராக போய் பார்த்து வருகிறார். சத்யம் தியேட்டருக்கு நேற்று தனுஷ் விசிட் அடித்த வீடியோக்கள் தற்போது டிரெண்டாகி வருகின்றன. பிரபுதேவாவுடன் தனுஷ் சத்யம் தியேட்டரில் திருச்சிற்றம்பலம் படத்தை பார்த்துள்ளார்.

ரசிகர்கள் குஷி
நடிகர் தனுஷை பெரிய ஸ்க்ரீனில் காண குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து வரும் நிலையில், நேற்று சத்யம் தியேட்டருக்கு தனுஷ் திடீர் விசிட் அடித்த நிலையில், ரசிகர்கள் திரையிலும், நேரடியாகவும் திருவை சந்தித்து விட்டோம் என அவரது வீடியோக்களை ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

தனுஷ் ஹேப்பி
தி கிரே மேன் படத்தில் அப்படியொரு ரோல் கிடைத்ததில் இருந்தே நடிகர் தனுஷ் செம ஹேப்பியான நிலையில், தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது படத்தை தியேட்டரில் மக்கள் கொண்டாடுவதை நேரடியாக சென்று பார்த்த நடிகர் தனுஷ் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று விட்டார். ரசிகர்களுக்கு கையசைத்தும், நன்றி தெரிவித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











