Dhanush VS SK: பொங்கல் ரேஸில் தீவிரம் காட்டும் அயலான், கேப்டன் மில்லர்... ரன்னிங் டைம் தெரியுமா?

சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் வரும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகின்றன. ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அயலான், கேப்டன் மில்லர் படங்களின் ரன்னிங் டைம் அப்டேட் வெளியாகியுள்ளது.

கேப்டன் மில்லர், அயலான் ரன்னிங் டைம்
2023ம் ஆண்டு பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் வெளியாகின. பல ஆண்டுகளுக்குப் பின்னர் விஜய் - அஜித் இருவரின் படங்களும் நேருக்கு நேர் மோதின. அதேபோல் இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் 350 கோடிகளுக்கும் அதிகமாக வசூல் செய்தது. அதேபோல், 2024ல் தனுஷும் சிவகார்த்திகேயனும் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.

 Dhanush VS SK: Dhanush Captain Miller and Sivakarthikeyan Ayalaan film running time updates here

அதன்படி, தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படங்கள் 2024 பொங்கலுக்கு ரிலீஸாகின்றன. ஆரம்பத்தில் நண்பர்களாக பழகி வந்த தனுஷும் சிவகார்த்திகேயனும் தற்போது எதிரும் புதிருமாக வலம் வருகின்றனர். இதனால் இந்த பொங்கல் ரேஸில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் இரண்டில் எது வெற்றி பெறும் என்பதே பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

இதனையடுத்து இரண்டு படக்குழுவினரும் அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டு அசத்தி வருகின்றன. நேற்று அயலான் இசை வெளியீட்டு விழா சிம்பிளாக நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 5ம் தேதி அயலான் ட்ரெய்லர் வெளியாகிறது. அதேபோல் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவும் விரைவில் நடைபெறவுள்ளது. அயலான் இசை வெளியீட்டு விழாவில் தனுஷின் கேப்டன் மில்லர் வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்திருந்தார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் கேப்டன் மில்லர், அயலான் படங்களின் ரன்னிங் டைம் குறித்த அப்டேட்கள் கிடைத்துள்ளன. அதன்படி தனுஷின் கேப்டன் மில்லர் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் ரன்னிங் டைம், 2 மணி நேரம் 25 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சென்சார் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம், பொங்கல் ரேஸில் இருந்து தள்ளிப் போவதாக தெரிகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படம் ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X