Kuberaa: குபேராவுக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு.. தியேட்டரில் எமோஷனலான தனுஷ்.. கண் கலங்குறாரேப்பா!

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இன்று அதாவது ஜூன் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள படம் குபேரா. இந்த படத்தில் தனுஷ் உடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தை தெலுங்கு திரையுலகின் மிகச் சிறந்த இயக்குநர் எனப்படும் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். படம் இன்று வெளியான நிலையில் படத்தை ரசிகர்களுடன் இணைந்து படம் பார்க்க தனுஷ் சென்னை, கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு வந்தார். அவருக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவை பார்த்து தனுஷ் எமோஷனலாகிவிட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள அவரது 51 வது படமான குபேரா படத்தின் டைட்டில் கார்டில் இருந்து, ஃபர்ஸ்ட் லுக், கிளிம்ஸ், டீசர், பாடல்கள், ட்ரைலர் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக உருவாக்கப்பட்டு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

Dhanush Watched Kuberaa With His Fans At Rohini Theatre With Tears Images And Videos Goes Trending
Photo Credit:

நடிகர் தனுஷ் பொதுவாக தனது படத்தின் முதல் நாள் முதல் காட்சியை சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் பார்ப்பார். ரசிகர்களுடன் இவர் படம் பார்க்க வருவார் என்று தெரிந்து கொண்டு பலரும் தனுஷை பார்க்க தியேட்டருக்கு வருவார்கள். தனுஷ் கடைசியாக தனது இயக்கத்தில் வெளியான ராயன் படத்தைப் பார்க்க வந்திருந்தார். அதேபோல் ரஜினிகாந்த்தின் வேட்டையன் படத்தைப் பார்க்கவும் வந்திருந்தார்.

ரோகிணியில் தனுஷ்: இந்நிலையில் குபேரா படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வந்த தனுஷைப் பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள். ரசிகர்களை நோக்கி தனுஷ் கையசைத்தார். அப்போதும் ரசிகர்கள் மேலும் மேலும் ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தனுஷ் உடன் படம் பார்க்க இயக்குநர் சேகர் கம்முலாவும் படக்குழுவினரும் வந்திருந்தனர்.

தனுஷ் கண்ணீர்: தனுஷ் வழக்கமாக அமர்ந்து படம் பார்க்கும் இருக்கைக்கு சென்று அமர்வதற்கு முன்னர், ரசிகர்களை நோக்கி கையசைத்து விட்டு இருக்கையை நோக்கி நகரும்போது எமோஷனலாகிவிட்டார் போலத் தெரிகிறது. மேலும் இணையத்தில் பரவி வரும் புகைப்படங்களில் அவர் மிகவும் எமோஷனலாகி கிட்டத்தட்ட அழுவதைப் போல தெரிவதாக இணையவாசிகள் கூறிவருகிறார்கள். தனுஷ் தனது ரசிகர்கள் அவர் மீது செலுத்தும் அபரிமிதமான அன்பைப் பார்த்து மிகவும் எமோஷனலாகி அமைதியாக அமர்ந்துவிட்டார்.

Dhanush Watched Kuberaa With His Fans At Rohini Theatre With Tears Images And Videos Goes Trending
Photo Credit:

நேஷ்னல் அவார்ட்: குபேரா படம் பார்க்க தனுஷ் தியேட்டருக்கு வந்தது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதை ரசிகர்கள் இணையத்தில் டிரெண்டாக்கி வருகிறார்கள். படம் பார்த்த ரசிகர்கள் படத்தை மிகவும் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக படம் ஹாலிவுட் தரத்திற்கு இருப்பதாகவும், கிளைமாக்ஸ் மட்டும் டக்கென முடிந்துவிட்டது எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் படம் நிச்சயம் பல தேசிய விருதுகளை வெல்லும் எனவும் ரசிகர்கள் தங்களது விமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X