twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெற்றிமாறனை கண்டுபிடித்த தனுஷ்..பொல்லாதவன் 15 ஆண்டு..2 தேசிய விருதுகளை அள்ளிய கூட்டணி

    |

    சாதாரண காதல் செய்யும் இளைஞராக நடித்து வந்த தனுஷ் ஒரு வித்தியாசமான கதையில் நடித்து புகழ் பெற்றார். அந்த படம் பொல்லாதவன்.
    தனுசுக்கு வாழ்க்கையில் பல திருப்புமுறைகளை ஏற்படுத்த காரணமாக அமைந்தவர் வெற்றிமாறன். தனுஷ் வெற்றிமாறன் இணைந்த பின் பல வெற்றி படங்களை கொடுத்தனர்.
    தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்த படங்களில் ஆடுகளம், அசுரன் படம் இருவருக்கும் தேசிய விருதை பெற்றுத் தந்தது.

    பொல்லாதவன் 2வுக்கு வெயிட்டிங்.. தனுஷ் பக்கத்துல நிற்கிறது யாருன்னு பாருங்க.. அதே ரம்யா தான்! பொல்லாதவன் 2வுக்கு வெயிட்டிங்.. தனுஷ் பக்கத்துல நிற்கிறது யாருன்னு பாருங்க.. அதே ரம்யா தான்!

     ஹீரோ மரபுகளை உடைத்த ரஜினிகாந்த், தனுஷ்

    ஹீரோ மரபுகளை உடைத்த ரஜினிகாந்த், தனுஷ்

    ஹீரோ என்றால் பர்சானலிட்டி வேண்டும்,கலர்,முக அழகு,ஹேர் ஸ்டைல் உள்ளிட்டவை கவனிக்கபட்ட வந்த காலத்தில் அவை அத்தனையும் உடைத்து மாற்றத்தை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த். அவருக்குப் பின்னர் அவரை பின்பற்றி பலர் திரைக்கு வந்தனர். அதை எல்லாம் தாண்டி ஹீரோவுக்கு சம்பந்தம் இல்லாமல் சிறுவனாக ஒருவர் நடிக்க வந்தார். பள்ளி பருவத்து காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் 2002 ஆம் ஆண்டு தனுஷ் அறிமுகமானார். அப்போது பலர் அதை கிண்டல் அடித்தனர். அதற்கு காரணமும் இருந்தது அவர் நடித்த படங்கள் அனைத்தும் அதே போன்று கதை அம்சங்கள் தலைப்புகளாக இருந்தது. சுள்ளான், திருடா திருடி என அடுத்தடுத்த இரண்டு வருடங்களில் அவர் இதே போன்ற படங்கள் நடித்து பெரிதாக பேசப்படாமல் இருந்தார்.

     பொல்லாதவன் படத்துக்கு விதைபோட்ட புதுப்பேட்டை படம்-வெற்றிமாறனின் நட்பு

    பொல்லாதவன் படத்துக்கு விதைபோட்ட புதுப்பேட்டை படம்-வெற்றிமாறனின் நட்பு

    2004 ஆம் ஆண்டு தனுஷுக்கு திருமணம் நடந்தது அதன் பின்னர் அவர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அதுவரை காதலன், பெண் பின்னால் அலையும் இளைஞன் போன்ற பாத்திரங்களில் நடித்து வந்த தனுஷ் முதன்முறையாக அண்ணன் செல்வ ராகவன் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு புதுப்பேட்டை என்கிற படத்தில் நடித்தார். இப்படத்தில் செல்வராகவனின் உதவி இயக்குநராக இருந்தவர் வெற்றிமாறன். இந்த படம் தனுஷுக்கு ஒரு திருப்புமுறையாக அமைந்தது. இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா-முத்துக்குமார் கூட்டணியில் அருமையான பாடல்களும், வித்தியாசமான கதை, தனுஷின் வித்தியாசமான நடிப்பு மிகப்பெரிய வெற்றியை தந்தது. அதுவரை உள்ளே இருந்த புதிய தனுஷ் வெளியே வந்தார். வலுவான ரோல்களையும் தனுஷால் செய்ய முடியும் என்ன ரசிகர்கள் நம்ப ஆரம்பித்தனர்.

     தனுஷ், வெற்றி மாறனை கண்டுபிடித்த படம் பொல்லாதவன்

    தனுஷ், வெற்றி மாறனை கண்டுபிடித்த படம் பொல்லாதவன்

    புதுப்பேட்டையில் கிடைத்த நட்பு தனுஷ் வெற்றிமாறனின் திறமையை அங்கீகரிக்க ஆரம்பித்தார். இந்தக்கூட்டணி 2007 ஆம் ஆண்டு உருவாக்கிய படம் தான் பொல்லாதவன். புதுப்பேட்டை படத்திலேயே தனுஷ் உதவி இயக்குநராக பணியாற்றிய வெற்றிமாறனின் திறமையை அறிந்துக்கொண்டார். அதேபோல் தனுஷ் தனது முதல் படத்துக்கு ஏற்ற கதாநாயகன் என முடிவு செய்த வெற்றிமாறன் தனுஷிடம் கதை சொல்ல உருவான படம் தான் பொல்லாதவன். சாதாரண ஆசா பாசம் கொண்ட இளைஞன் சூழ்நிலை காரணமாக தன்னுடைய மோட்டார் பைக்கை இழக்க அதன் பின்னர் ரவுடி கும்பலுடன் மோதும் நிலை ஏற்படுவதையும், அதனால் அவனது குடும்பம் பாதிக்கப்படுவதையும் யதார்த்தமாக எடுத்திருப்பார் வெற்றிமாறன்.

     இளைஞர்களின் மோகமாக மாறிய பல்சர் பைக்

    இளைஞர்களின் மோகமாக மாறிய பல்சர் பைக்

    இந்தப்படம் இருவருக்குமே திருப்புமுனையை ஏற்படுத்திய படம் எனலாம். இந்தப்படத்தில் தனுஷ் பல்சர் பைக் ஒன்றை ஆசையாக வாங்குவார். அதில் காதலியை ஏற்றிக்கொண்டு சுற்றுவார். திடீரென காதலியை சந்திக்க வந்த இடத்தில் ரவுடிகளுக்குள் நடக்கும் மோதலில் அவரது பைக்கை திருடிவிடுவார்கள். ஆசை ஆசையாய் வாங்கிய பைக்கை காணாமல் தனுஷ் தேடி அலைவதும், அதனால் அவர் வேலை போவது, ரவுடிகும்பலுடன் மோதல் என வாழ்க்கையே தடம் புரளும் காட்சிகள் வெகு இயல்பாக இருக்கும்.

     2 தேசிய விருதுகளை வாங்கிய தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி

    2 தேசிய விருதுகளை வாங்கிய தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி

    இந்தப்படம் வந்த நேரத்தில் தனுஷ் ஓட்டிய பல்சர் பைக் மாடல் இளைஞர்களின் வாகனமாக மாறியது. அந்த நேரத்தில் அந்த பைக்கை வாங்கிக்கொண்டு இளைஞர்கள் சுற்ற ஆரம்பித்தனர். அந்த அளவுக்கு அழுத்தமாக மோட்டார் பைக் படத்தின் கதையோடு பின்னப்பட்டிருக்கும். இந்தப்படத்தின் மூலம் பாலுமகேந்திராவின் சிஷ்யர், செல்வராகவனின் உதவி இயக்குநர், வெற்றிமாறன் எனும் மிகப்பெரிய இயக்குநர் தமிழ் திரையுலகிற்கு கிடைத்தார். அதன் பின்னர் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி 2 தேசிய விருதுகளை பெற்றது. விசாரணை படத்துக்காக வெற்றிமாறன் தனியாக பேசப்பட்டார்.

     அழுத்தமான ரோல்களை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை கொடுத்த படம் பொல்லாதவன்

    அழுத்தமான ரோல்களை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை கொடுத்த படம் பொல்லாதவன்

    பொல்லாதவன் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. பொல்லாதவன் படத்துக்கு பின் ஏகப்பட்ட மாற்றங்கள். தன்னால் அழுத்தமான ரோல்களை நடிக்க முடியும் என புதுப்பேட்டை, பொல்லாதவன் போன்ற படம் மூலம் நிரூபித்த தனுஷ் அவ்வப்போது கமர்ஷியல் காதல் படங்களை தந்தாலும் 2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் கூட்டணியில் ஆடுகளம் படத்தை தந்தார், அடுத்து 2018 ஆம் ஆண்டு வடசென்னை எனும் படம் வடசென்னை ரவுடிகள் இடையே நடக்கும் போட்டி, சிறைக்குள் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

     தனுஷின் திரைப்பட வாழ்க்கையில் முக்கிய இடம் பொல்லாதவன் படத்துக்கு உண்டு

    தனுஷின் திரைப்பட வாழ்க்கையில் முக்கிய இடம் பொல்லாதவன் படத்துக்கு உண்டு

    2019 ஆம் ஆண்டு வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளியான அசுரன் மிகப்பெரிய வெற்றியையும், தனுஷுக்கான அழுத்தமான ரோல் மூலம் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. வெற்றிமாறனுக்கும் தேசிய விருது கிடைத்தது. இதற்கெல்லாம் அச்சாணியாக அமைந்த படம் பொல்லாதவன். 15 ஆண்டுகளுக்கு முன் இயக்குநராக வாழ்க்கையை பொல்லாதவன் படத்தின் மூலம் தொடங்கிய வெற்றிமாறன் இன்று உச்ச இயக்குநராக விளங்குகிறார். இந்தப்படத்தில் நடித்த ரம்யா பின்னர் எம்.பியானார். தனுஷ் வாழ்க்கையை திருப்பிப் போட்ட படம் என்பதால் பொல்லாதவனுக்கு எப்போதும் ஒரு பெயர் உண்டு.

      English summary
      Dhanush, who played a normal young man in love, rose to fame by acting in a different story. That movie is Pollathavan. Vetrimaran is the one who caused many turning points in the life of Dhanush. After joining Dhanush Vetrimaran, they gave many successful films. Aadukalam and Asuran were the films that Dhanush -Vetiramaran teamed up with and won the National Award for both.
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X