லால் சலாம் பட ஹீரோவை கார்னர் செய்த தனுஷ்… க்ளீன் போல்ட் ஆன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
சென்னை: முன்னணி நடிகராக கலக்கி வரும் தனுஷ் 2017ல் பவர் பாண்டி படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார்.
ராஜ்கிரன், ரேவதி, பிரசன்னா ஆகியோர் நடிப்பில் வெளியான பவர் பாண்டி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், மீண்டும் இயக்குநராக களமிறங்கவுள்ள தனுஷின் அடுத்த படம் குறித்து சூப்பரான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷின் பவர் பாண்டி
தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், தனுஷ் மீண்டும் படம் இயக்க முடிவு எடுத்துள்ளாராம். ஏற்கனவே 2017ம் ஆண்டு தனுஷ் பவர் பாண்டி என்ற படத்தை இயக்கியிருந்தார். தனுஷ். ராஜ்கிரன், ரேவதி, பிரசன்னா, சாயா சிங் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்தப் படம், ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. ராஜ்கிரன் - ரேவதி இருவரின் காதல் காட்சிகளை பின்னணியாக வைத்து முதிர்ச்சியான ஒரு படத்தை இயக்கியிருந்தார் தனுஷ்.

மீண்டும் இயக்குநர் கனவு
இந்நிலையில், தனுஷ் தனது 2வது படத்தை இயக்க ரெடியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாகவே இரண்டாவது படத்திற்கான கதை ரெடியாகிவிட்டதாக தனுஷ் கூறி வந்தார். மேலும் தனுஷ் இயக்கும் அவரது இரண்டாவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறதாம். இது பவர் பாண்டி போல அல்லாமல் கொஞ்சம் பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் தனுஷுடன் மேலும் ஒரு இளம் நடிகர் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின.

லால் சலாம் பட ஹீரோ
அதன்படி, தனுஷ் இயக்கும் படத்தில் அவருடன் விஷ்ணு விஷாலும் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் இதில், விஷ்ணு விஷாலுக்கு சூப்பரான ரோல் என சொல்லப்படுகிறது. கட்டா குஸ்தி படத்தில் நடித்துள்ள விஷ்ணு விஷால், அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் நடிக்கவுள்ளார். அதேநேரம் தனுஷும் தனது அடுத்த படத்திற்கு விஷ்ணு விஷாலை புக் செய்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. தனுஷ் இயக்கும் படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாத்தி ரிலீஸ் தேதி
பவர் பாண்டி மூலம் இயக்குநராகவும் பாராட்டுகளைப் பெற்ற தனுஷ், அவரது இரண்டாவது படத்திலும் ஸ்கோர் செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே, டிசம்பர் 2ம் தேதி வெளியாகவிருந்த தனுஷின் வாத்தி படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. தான் இயக்கும் படத்தைத் தொடர்ந்து இளன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளாராம். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும், இதுகுறித்தும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











