தலைவர் 173 படத்தை தனுஷ் இயக்கப் போகிறாரா?.. அங்க சுத்தி இங்க சுத்தி எங்க வந்து நிக்குது பாருங்க?

சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில், சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கலையே என்கிற கதையாக அந்த படத்துக்கு இயக்குநரும் கதையும் இன்னும் சிக்கவில்லை என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.

கோலிவுட்டில் ரஜினிகாந்த் படத்தை இயக்கவே டைரக்டர்கள் இல்லையா என டோலிவுட் ரசிகர்கள் எல்லாம் சிரிப்பாக சிரித்து கிண்டலடித்து வருகின்றனர். ராஜெமெளலி, பிரசாந்த் நீல், சந்தீப் ரெட்டி வங்கா, சுகுமார், ரிஷப் ஷெட்டி என தென்னிந்தியாவிலேயே திறமையான பல இயக்குநர்கள் உருவாகி உள்ள நிலையில், கோலிவுட் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்வது வேதனையளிக்கிறது என்கிற விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

Dhanush will direct Thalaivar 173 rumours and Rajinikanth fans trolls trending
Photo Credit:

இந்நிலையில், ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தை தனுஷ் இயக்கப் போவதாகவும் ஒரு வதந்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருப்பது தான் உலக மகா உருட்டு என கலாய்த்து வருகின்றனர்.

ராஜ்கிரணுக்கு ஓகே: நடிகர் தனுஷ் இயக்குநராக மாறி படங்களை இயக்கி வந்தாலும், அவருக்கே அவரால் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிக் கொள்ள முடியாத சூழலில் ரஜினிகாந்தை வைத்து எல்லாம் அவரால் படமே பண்ண முடியாது என்றும் தலைவர் 173 படத்தை அவர் இயக்கப் போவதாக வேண்டுமென்றே சோஷியல் மீடியாவில் சில நெட்டிசன்கள் தான் இந்த வேலையை பார்த்துள்ளனர் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ராஜ்கிரணை வைத்து பவர் பாண்டி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான தனுஷ் இட்லி கடை படத்திலும் அவருக்கு நல்ல கேரக்டரை கொடுத்திருந்தார். ராஜ்கிரணுக்கு தனுஷ் ஓகே என்றும் தலைவர் பக்கம் வந்துவிட வேண்டாம் என ரஜினி ரசிகர்களே கையெடுத்துக் கும்பிட்டு வருகின்றனர்.

ஐஸ்வர்யா பண்ணதே போதும்: ஏற்கனவே மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என சூப்பர் ஸ்டாரை வைத்து மொக்கை பண்ணதே போதும் என்றும் தனுஷ் ஒருவேளை தலைவர் 173 படத்தை எடுத்தால் அது இட்லி கடை படத்தை விட சுமாராகத்தான் வரும் என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

சுந்தர். சி பார்த்த வேலை: லோகேஷ் கனகராஜ் போல தன்னுடைய நிலைமையும் ஆகிவிடுமோ என பயந்து சுந்தர். சி ஒதுங்கிய நிலையில், அவர் பார்த்த வேலையால், தலைவர் 173 படத்துக்கு இயக்குநர் கிடைக்காமல் கமல்ஹாசன் ரொம்பவே தவியாக தவித்து வருகிறார் என்றும் ரஜினி படத்தை கமலே இயக்கினால் சிறப்பாக இருக்கும் என்றும் கருத்துக்கள் பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X