எனக்கு எப்பவுமே நீ பொடிப்பயன் தான்.. அனிருத்தை வாழ்த்திய தனுஷ்.. மீண்டும் இணைந்த DnA காம்போ!

சென்னை: 3 படத்தில் ஒய் திஸ் கொலவெறி பாட்டுப் போட்டு ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் திரும்ப பார்க்க வைத்த தனுஷ் அண்ட் அனிருத் DnA காம்போ மீண்டும் இணைந்துள்ளது.

ராக்ஸ்டார் அனிருத்தின் 30வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.

நடிகர் தனுஷும் அனிருத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

3, வேலையில்லாத பட்டதாரி, தங்கமகன் உள்ளிட்ட தனுஷ் படங்களுக்கு இசையமைத்த அனிருத், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அவருடன் தொடர்ந்து பணியாற்றவில்லை. தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல், காக்கி சட்டை, நானும் ரவுடி தான் படத்திற்கு இசையமைத்த அனிருத், அதற்கு பின்னர், சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைக்க சென்று விட்டார்.

30 வயசு ஆகிடுச்சு

30 வயசு ஆகிடுச்சு

1990ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி நடிகர் ரவிச்சந்திரனுக்கு மகனாக பிறந்த அனிருத்துக்கு இன்று 30 வயசு ஆகிடுச்சு. அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ் சினிமா ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அனிருத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மீண்டும் இணைந்த DnA

அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அதிரடியான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் தற்போது ஒரு வீடியோவுடன் வெளியிட்டு வாழ்த்தி உள்ளது. அந்த வீடியோவில் தனுஷும் அனிருத்தும் மீண்டும் இணைந்து D44 படத்திற்காக பணியாற்றுவதை பார்த்த ரசிகர்கள், சந்தோஷமடைந்துள்ளனர். அந்த வீடியோவை தனுஷ் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

எப்பவுமே பொடிப்பயன் தான்

டொரன்டோ, சிங்கப்பூர், துபாய் என ராக்ஸ்டாராக கலக்கி வந்த அனிருத், மறுபடியும், மொட்டை மாடியில் கையில் ஹார்மோனிய பொட்டியுடன் உள்ளார். பக்கத்தில் லுங்கி அணிந்து கொண்டு சிப்ஸ் சாப்பிட்டபடியே, அனிருத்தை பார்த்து வாசி என தனுஷ் சொல்லும் வீடியோ வேற லெவல். அதை ஷேர் செய்து அனிருத்துக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி உள்ளார் தனுஷ்.

எதிர்நீச்சல் மேக்கிங்

தனுஷ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தின் போது, இதே போலத்தான் மாடியில் ஹார்மோனிய பொட்டியுடன் பொடிப்பயன் தனுஷ் வாசித்தார் என த்ரோபேக் வீடியோவையும் ஷேர் செய்து தனுஷ் ரசிகர்கள் அனிருத்துக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். தனுஷ், அனிருத் இசையில் டி44 சும்மா தெறிக்கப் போவது நிச்சயம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X