ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொன்ன தனுஷ்.. மாமா மாப்பிள்ளைனா சும்மாவா?
சென்னை : நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
'அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'தலைவர் 169' படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். நெல்சன் இயக்கவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் , கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தரமான அப்டேட்
தலைவர் 169 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில் நீண்ட நாளாக எந்த விதமான அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்தது. இதையடுத்து நேற்று சன்பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டார் புகைப்படத்தை பதிவிட்டு காலை 11 மணிக்கு அப்டேட் என்று வெளியிட்டு இருந்தது. எந்த படத்தின் அப்டேட் என்று தெரியாமல் குழம்பிவந்தனர்.

ஜெயிலர்
இதையடுத்து, இன்று காலை படத்தின் தலைப்பைப் படக்குழு வெளியிட்டது. அதன்படி தலைவர் 169 படத்திற்கு ஜெயிலர் என்று பெயரிட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. டைட்டிலுடன் இரத்தக் கரை படிந்த கத்தி போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியான நிலையில் படக்குழு அதனை உறுதிப்படுத்தி உள்ளது. இதனை ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வாழ்த்திய தனுஷ்
இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ஜெயிலர் படத்தில் டைட்டில் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர் மாமா.. மாப்பிள்ளை பாண்டிங்னா சும்மா என்று கேட்டு, வருகின்றனர்.

நன்றி மறந்துவிட்டார்
நடிகர் தனுஷ் திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து கடந்த மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அண்ணன் செல்வராகவனுக்கும், தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு நன்றி கூறியிருந்தார். ஆனால், திரைத்துறையில் இவர் இவ்வளவு பெரிய இடத்திற்கு வர காரணமாக இருந்த ரஜினிகாந்தை மறந்துவிட்டாரே என ரசிகர்கள் தனுஷை கண்டபடி விமர்சித்தனர். தற்போது ஜெயிலர் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளதால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











