முதல் முறையாக மக்கள் பணி... உதயநிதி ஸ்டாலினுக்கு தனுஷ் வாழ்த்து
சென்னை : நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக.,வின் இளைஞரணி தலைவரான உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார். இவர் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை.
முதல் தேர்தலிலேயே 16,000 க்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். தனது வெற்றி சான்றிதழை பெற்ற உதயநிதி, தனது தந்தையும் திமுக தலைவருமான ஸ்டாலினிடம் அளித்து வாழ்த்து பெற்றார்.

உதயநிதி ஸ்டாலின், ஒரு கல் ஒரு கண்ணாடி, மனிதன் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இதனால் நடிகர் என்ற முறையில் திரையுலகை சேர்ந்த பலரும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷும் உதயநிதிக்கு ட்விட்டரில் வாழ்த்து பகிர்ந்துள்ளார்.
தனுஷ் தனது பதிவில், முதல் முறையாக மக்கள் பணிசெய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நண்பர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எமது இதயபூர்வமான வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். தனுஷின் இந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











