Dhanush Raayan: பட்டையை கிளப்பும் ராயன்.. 8ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தனுஷ், இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் எட்டாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் தனுஷின் கேரியரில் மாபெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக ராயன் திரைப்படம் இருந்தது. இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன். எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி என பலரும் நடித்திருந்தனர். இது தனுஷின் 50வது படம் என்பதால் முதல் நாளில் இருந்தே படத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து கலவையான விமர்சனங்கள் வந்தன.

8

அடங்காத அசுரன்: பா பாண்டி படத்தை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்த தனுஷ், தனது 50வது படத்தை தானே இயக்கி, அதில் காத்தவராயன் என் ரோலில் மிகவும் பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் தனுஷ். தம்பி, தங்கை மீது ஒட்டுமொத்த பாசத்தையும் வைத்த அண்ணன். தனது குடும்பத்திற்காக அடுத்தடுத்து கொலைகளை செய்து பாதுகாக்கிறார். ஒரு கட்டத்தில் பார்த்து பார்த்து வளர்த்த தம்பிகளே தனக்கு துரோகம் செய்துவிட, அடங்காத அசுரனாக மாறி ஒட்டு மொத்த கூட்டத்தையும் வதம் செய்கிறார்.

மிகப்பெரிய பலம்: படத்திற்கு மிகப்பெரிய பலமாக ஏஆர் ரஹ்மானின் இசை அமைந்துள்ளது. அமைதியாக வாழ்ந்து வந்த தனுஷ், தனது தம்பிக்காக அசுர பலத்துடன் வந்து சரவணனை வதம் செய்த காட்சியின் பின்னணியும், காட்சியும் கூஸ்பம்சாக இருந்தது. படத்தை பார்த்த பலர் படம் வட சென்னை இரண்டாம் பாகம் போல இருக்கிறது என்றும், படத்தில் ஒரே ரத்தம், வெட்டு குத்து என நெட்டிவாக விமர்சனம் வந்தாலும் அது படத்தின் வசூலை பாதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

8ம் நாள் வசூல்: ராயன் படம் வெளியான முதல் நாளில் ரூ 13.65 கோடியை வசூலித்தது, இரண்டாவது நாளில் ரூ.13.75 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.15.25 கோடியை வசூலித்தது. தற்போது படம் வெளியாகி ஒரு வாரம் ஆகி உள்ள நிலையில், ராயன் படம் எட்டு நாட்களில் மொத்தம் ரூ.62.85 கோடியை வசூலித்துள்ளது. இந்த வாரம் யோகி பாபுவின் போட் மற்றும் விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படங்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு ஆடியன்ஸ் வராததால், ராயன் படத்தை பார்க்க தியேட்டருக்கு ஆட்கள் வருவதால், ராயன் படம் விரைவில் ரூ 100 கோடியை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X