Pongal release: பொங்கலுக்கு அதிரடி கிளப்ப தயாரான கேப்டன் மில்லர் -அயலான்.. படங்களுக்கான ஒற்றுமை இதோ!
சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் மிகச்சிறப்பாக தயாராகி வருகின்றனர். அடுத்தடுத்த விடுமுறைகள் வருவதால் ஒருபுறம் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. மறுபுறம் சென்னையிலேயே மிகச்சிறப்பாக பொங்கலை கொண்டாடவும் மக்கள் திட்டமிட்டு வருகின்றனர். பொங்கல் ஷாப்பிங்கும் களைகட்டி வருகிறது. இன்னொரு வகையில் தமிழக அரசும் பொங்கல் பரிசு, தொகுப்பு என இந்த ஆண்டு பொங்கலை சிறப்பாக்கி வருகிறது. நாங்கள் மட்டும் என்ன சளைத்தவர்களா என திரைத்துறையினரும் சிறப்பான படங்களை வெளியிட காத்திருக்கின்றனர்.
பொங்கலையொட்டி நாளைய தினம் அயலான் மற்றும் கேப்டன் மில்லர் என அதிரடி சரவெடியாக படங்கள் வெளியாகவுள்ளன. விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ், அருண் விஜய்யின் மிஷன் சேப்டர் ஒன் என தமிழில் சிறப்பான படங்கள் வெளியாகவுள்ளன. மேலும் தெலுங்கிலும் மகேஷ் பாபு, நாகர்ஜூனா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியாகவுள்ளன. இந்த ஆண்டு துவக்கத்திலேயே சிறப்பான பல படங்கள் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். இந்தப் படங்கள் ஏறக்குறைய அனைத்தும் நாளை தினம் ரிலீசாகவுள்ளதால் முன்பதிவும் சிறப்பான முறையில் நடந்து வருகிறது.

பொங்கல் ரிலீஸ் படங்கள்: பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். இந்த பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் படையெடுக்கத் துவங்கியுள்ளனர். புது துணிகளை வாங்க ஷாப்பிங் செல்பவர்களும் அதிகமாக காணப்படுகின்றனர். இந்நிலையில் பொங்கலுக்கு புதுப்படங்கள் இல்லாமலா என்ற வகையில் இந்த ஆண்டும் தமிழ், தெலுங்கு, இந்தி என ரசிகர்களை கொண்டாட செய்ய அதிகமான படங்கள் ரிலீசாகவுள்ளன. தமிழில் தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் ரிலீசாகவுள்ளன. இந்த இரு படங்களின் பிரமோஷன்களும் மிகச்சிறப்பாக நடத்தப்பட்ட நிலையில் இரு படங்களுக்கான எதிர்பார்ப்பும் மிக அதிகமாக உள்ளன.
பிரம்மாண்டமான தயாரிப்பு: இந்த இரு படங்களும் பொங்கலையொட்டி நாளை வெளியாகவுள்ள நிலையில் இரு படங்களும் பாக்ஸ் ஆபீசில் மிகப்பெரிய வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனின் படங்கள் முதல்முறையாக நேரடியாக மோதவுள்ளன. இரு படங்களுக்கும் அதிகமான ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இந்த இரு படங்களும் மிக பிரம்மாண்டமான முறையில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளன. தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் கேரியரில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள முதல் படங்கள் என்ற பெருமையையும் இந்தப் படங்கள் பெற்றுள்ளன.
கேப்டன் மில்லர் -அயலான் ஒற்றுமை: தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் அருண் மாதேஸ்வரன் மற்றும் ரவிக்குமாருடன் இணைந்து அடுத்த படங்களில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். தற்போது வெளியாகவுள்ள இந்தப் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறும் நிலையில், இரண்டு படங்களின் இரண்டாவது பாகங்களும் திட்டமிடப்பட்டுள்ளன. அதிகமான எதிர்பார்ப்புகளுடன் நாளைய தினம் வெளியாகவுள்ள இந்தப் படங்களுக்கு ரசிகர்கள் ஒரே மாதிரியான ஆதரவை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தப் படங்களில் அதிகமான ரசிகர்களை எந்தப் படம் கவரும் என்பதை இன்னும் சில தினங்களில் பார்க்கலாம்.
விஜய் சேதுபதி, அருண் விஜய் படங்கள்: இந்தப் படங்களை தொடர்ந்து நாளைய தினம் வெளியாகவுள்ள அருண் விஜய்யின் மிஷன் சேப்டர் ஒன் படமும் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் ஆக்ஷன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய பொங்கல் டிரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதேபோல ரொமாண்டிக் ஜானரில் உருவாகியுள்ள விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் படமும் ரசிகர்களுக்கு இந்த பொங்கலில் ஸ்வீட் பொங்கலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படங்களின் பிரமோஷன்களும் மிகச்சிறப்பாக அமைந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











