Captain Miller First week collection: தனுஷின் கேப்டன் மில்லர்.. முதல் வார வசூல் எவ்வளவு?

சென்னை: தனுஷ் நடிப்பில், ராக்கி, சாணி காயிதம் திரைப்படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியானத் திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தில், தனுஷ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், அதிதி பாலன், ஜான் கோகென், இளங்கோ குமாரவேல் எனப் பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி ஒருவாரமான நிலையில் முதல்வார வசூல் எவ்வளவு என்று பார்க்கலாம்.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ஏற்கனவே ராக்கி, ராணி சாகிதம் என இரண்டு படத்தை இயக்கி உள்ளார். மூன்றாவதாக கோலிவுட்டின் முன்னணி நடிகர் தனுசை வைத்து கேப்டன் படத்தை எடுத்துள்ளார். அவரின் முந்தைய படங்களைப் போலவே இந்த படத்திலும், ரத்தம் தெறிக்கும் காட்சிகள், துப்பாக்கி குண்டு சத்தம் என படம் முழுக்க இருந்தது.

Dhanushs Captain Miller first week collection

தனுஷுக்கு கேப்டன் மில்லர் படம் ஒரு வெற்றிப்படம் என்று தான் சொல்ல வேண்டும். இதில், தனுஷ் மூன்று விதமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். தனுஷ் ஈசன் என்ற கதாபாத்திரத்திலும், அவரது அண்ணன் சொங்கோலனாக என்ற கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடித்துள்ளார். சாதி அடக்குமுறையால் அவமானப்படும் தனுஷ், தனக்கு மரியாதை வேண்டும் என்பதற்காக பிரிட்டிஷ் படையில் சேருகிறான். ஆனால்,பிரிட்டிஷ் படை தனது, கிராமத்து மக்களையே கொன்று குவிக்க உத்தரவிடுகிறது.

தன் கைகளில் ரத்தக்கறை படிந்துள்ளதை எண்ணி, மனம் வருந்தும் தனுஷ் இதற்கு எல்லாம் காரணமாக இருந்த பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியை கொன்று விட்டு, பிரிட்டிஷ் படையில் இருந்த வெளியேறுகிறான். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தனுஷ் தனது அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஜெயிலர் படத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த சிவராஜ் குமார், இந்த படத்திலும் தெறிக்கவிட்டுள்ளார்

தனுஷின் அண்ணன் செங்கோலனாக சிவராஜ்குமார் சரியான தேர்வு என்றும், அவருக்கு இன்னும் சில காட்சிகள் கூடுதலாக இருந்த இருந்தால் நன்றாக இருந்து என்று படம் பார்த்த ரசிகர்கள் கூறினார். அண்ணன் தம்பி இருவரும் வேறுவேறு காரணங்களுக்காகப் போராடினாலும், அவர்கள் ஒன்றாக இணையும்போது, திரையில் அவர்களது கெமிஸ்ட்ரி நன்றாகத்தான் இருக்கிறது. கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் ஜனவரி 12ந் தேதி வெளியானது.

இப்படம் முதல் நாள் ரூ.8.65 கோடியை வசூலித்தது. தொடர் விடுமுறை இருந்ததால் படம் ஓரளவு வசூலை பெற்று வந்தது. ஆனால், நேற்று பொங்கல் விடுமுறை முடித்து வேலை தினம் என்பதால் படம் ரூ.1.55 கோடியை மட்டுமே வசூலித்தது. படத்தின் மொத்த வசூல் ரூ,40.36 ஆக உள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக மிகப்பெரும் செலவில் உருவான இத்திரைப்படம் ரூ100 வரைக்கும் கலேக்ஷனை அள்ளும் என எதிர்பார்த்த நிலையில் படம் வெளியான முதல் வாரத்திலேயே மந்தமான வசூலை பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X