Captain Miller Dhanush - புரட்சி ஓங்குக... கேப்டன் மில்லர் போஸ்டர்.. கெத்து காட்டும் தனுஷ்..ரசிகர்கள் வரவேற்பு

சென்னை: Captain Miller Dhanush (கேப்டன் மில்லர் தனுஷ்) கேப்டன் மில்லர் படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

தனுஷ் நடிப்பில் கடைசியாக வாத்தி படம் வெளியானது. வெங்கி அட்லூரி இயக்கிய அந்தப் படத்தின் மூலம் தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை ஆரம்பிக்கலாம் என கணக்கு போட்டிருந்தார் தனுஷ். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி திருச்சிற்றம்பலம் கொடுத்த வெற்றியை வாத்தியில் தனுஷ் தவறவிட்டுவிட்டாரே எனவும் அவரது ரசிகர்கள் கவலையடைந்தனர்.

Dhanushs Captain Miller Movie New Poster is out now

கேப்டன் மில்லர்: இதனையடுத்து ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க கமிட்டானார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க ப்ரியங்கா அருள்மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். நிச்சயம் இந்தப் படம் ஹிட்டாகும் என தனுஷ் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

சிக்கலை சந்தித்து முடிந்தது ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தபோதே சில சிக்கல்கள் ஏற்பட்டன. இருப்பினும் அதையெல்லாம் கடந்து விறுவிறுப்பாக நடந்துவந்த ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்துவிட்டது. இதனையடுத்து இப்படத்துக்காக வைத்திருந்த நீண்ட முடியையும், தாடியையும் திருப்பதிக்கு சென்று இறக்கினார் தனுஷ். படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. பீரியட் படமாக உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஃபர்ஸ்ட் லுக்: இதற்கிடையே கேப்டன் மில்லர் குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த சூழலில் அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் கையில் மிகப்பெரிய துப்பாக்கியுடன் தனுஷ் நிற்பது போலவும் அவருக்கு கீழே பலர் இறந்து கிடப்பது போலவும் இருந்தது. அதனை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக தனுஷின் ஆட்டம் இதில் வெறித்தனமாக இருக்கும் என ரசிகரக்ள் கூறினர்.

புதிய போஸ்டர்: இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியிருக்கிறது. அதில் தோளின் சிகப்பு துண்டுடனும் கையில் உடுக்கையுடனும் இருக்கும் தனுஷுக்கு பின்னணியில் ரஷ்ய புரட்சியாளர் லெனின் புகைப்படமும்; புரட்சி ஓங்குக என்ற வாசகமும் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் போஸ்டர் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது. மேலும் இந்தப் போஸ்டரை பார்த்தால் படம் கம்யூனிசம் பேசும் விதத்தில் அமைந்திருக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X