Captain Miller: தனுஷ் படத்திற்கு கிடைத்த யூ/ஏ சான்றிதழ்.. எப்ப ரிலீஸ்.. அப்டேட் இதோ!

சென்னை: நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தை இயக்கியுள்ளார் அருண் மாதேஸ்வரன். அவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான ராக்கி, சாணி காயிதம் படங்கள் அதிகமான கவனிப்பை பெற்றுள்ள நிலையில், பல மாதங்களாக கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங் நடந்தது. குறிப்பாக அதிகபட்சம் 3 மாதங்கள் மட்டுமே தன்னுடைய படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கும் வழக்கமுடைய தனுஷ் இந்தப் படத்திற்கு 10 மாதங்கள் கால்ஷீட் கொடுத்து தன்னுடைய கெட்டப்பையும் மாற்றிக் கொண்டு நடித்திருந்தார்.

சுதந்திர போராட்ட காலத்தை மையமாக கொண்ட கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிவராஜ்குமார் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். டீசரில் தனுஷ், சிவராஜ்குமார் ஆகியோரின் வெறித்தனமான நடிப்பை பார்க்க முடிந்தது. இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ள நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Dhanushs Captain miller movie release date announced by the team

தனுஷின் கேப்டன் மில்லர் படம்: நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர். திருச்சிற்றம்பலம், வாத்தி என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்துள்ள தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இநத்ப் படத்தை இயக்கியுள்ளார் அருண் மாதேஸ்வரன். இந்தப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொங்கல் கொண்டாட்டமாக படம் வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவற்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் வித்தியாசமான கெட்டப்புகளில் தனுஷை பார்க்க முடிந்தது.

மிரட்டிய டீசர்: படத்தின் டீசரில் சிவராஜ்குமாரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் படத்தில் அவர் தனுஷின் அண்ணனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சுதந்திர போராட்ட காலகட்டத்தை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ள நிலையில் தனுஷ், நீண்ட தலைமுடி, தாடி, மீசையுடன் வித்தியாசமான கெட்டப்பில் ரசிகர்களை ஈர்த்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீடு ஜனவரி முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரமும் 100 கோடி ரூபாய்களை கடந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 12ம் தேதி ரிலீஸ்: இந்நிலையில் இந்தப் படம் பொங்கலையொட்டி வரும் ஜனவரி 12ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளதாக தற்போது படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் சென்சாரும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் புதிய போஸ்டருடன் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் பேக்கிரவுண்ட் இசை மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் ஆயிரத்தில் ஒருவன் படத்தை ஆண்டுகள் தாண்டி ரசிகர்கள் கொண்டாடுவது போல கேப்டன் மில்லர் படத்தையும் ஆண்டுகள் கழிந்தும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று அவர் தனது சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்: படத்தின் அடுத்தடுத்த இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டில் தனுஷின் பேச்சை கேட்கவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் படம் ஐமேக்ஸ் திரைகளில் ரிலீசாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக வெளியாகிவுள்ள நிலையில் கேரளாவில் ஃபார்ச்சூன் சினிமாஸ் சார்பில் படம் வெளியாகவுள்ளதாகவும் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல இந்தியில் ஜி டெலிபிலிம்ஸ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X