Captain Miller: ஆத்தாடி.. இப்பவே தனுஷ் தாறுமாறு தான் போல.. கேப்டன் மில்லர் பிசினஸ் லெவல் தெரியுமா?
சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர் பற்றி எந்தவொரு அப்டேட்டும் இல்லாமல் அப்படியே ஆஃப் ஆகிவிட்டது என நினைத்துக் கொண்டிருந்த தனுஷ் ரசிகர்களுக்கு தற்போது சுட சுட சூடான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
ராக்கி, சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தை இயக்கி வருகிறார்.

தனுஷின் கேப்டன் மில்லர்: கேப்டன் மில்லர் படத்தில் தனுசுக்கு வில்லனாக ஜெயிலர் படத்தில் மரண மாஸ் என்ட்ரி கொடுத்த கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடித்துள்ளார். மேலும் ஹீரோயினாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான கேப்டன் மில்லர் டீசர் ஒட்டுமொத்த சினிமா உலகத்தையும் வியப்பில் ஆழ்த்தியது.
ஹாலிவுட் தரத்தில் ஒரு போர் படத்தை தமிழ் சினிமாவில் எடுக்க முடியுமா என்கிற கேள்விக்கு கேப்டன் வில்லர் திரைப்படம் பதில் சொல்லும் அளவிற்கு அதன் விஷுவல்ஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் மில்லர் பிசினஸ்: ரஜினிகாந்தின் பிறந்தநாளை தொடர்ந்து டிசம்பர் 15-ஆம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகும் என்கிற அறிவிப்பு வெளியான நிலையில், லியோ படத்திற்கு பிறகு இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள மிகவும் பிரம்மாண்டமான படமாக கேப்டன் மில்லர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அந்த படத்திற்கான பிசினஸ் சூடு பிடித்து இருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. நடிகர் தனுஷ் நடித்த படங்கள் உலக அளவில் 100 கோடி அளவுக்கு பாக்ஸ் ஆபீஸ் பெற்று வரும் நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் மட்டுமே 100 கோடியை தொட்டுவிட்டதாக தற்போது வியப்பூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்தடுத்து பிஸி: படம் வெளியாக இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில், இப்போதே இப்படி ஒரு வியாபாரமா என்கிற வியப்பில் கோலிவுட் ஆடிப்போய் கிடப்பதாக கூறுகின்றனர்.
நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு மட்டுமின்றி அந்த படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் லைஃப் டைம் செட்டில்மெண்ட் படமாக இருக்கும் என்றும் தெரிகிறது.
கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு நடிகர் தனுஷ் அடுத்து ராயன் படத்தை இயக்கி நடித்து வருகிறார். அந்த படத்திற்காக மொட்டைப் போட்டுள்ள தனுஷ், இந்தி படத்தின் படப்பிடிப்பையும் முடித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் பைலிங்குவல் படமாக வெளியான வாத்தி படம் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் படமாக மாறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











