Captain Miller Trailer Review: பொங்கலுக்கு தீபாவளி உறுதி.. கேப்டன் மில்லர் டிரெய்லர் எப்படி இருக்கு?
சென்னை: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி மிரட்டுகிறது. இந்த படம் கண்டிப்பாக தீபாவளி ரிலீஸாக தியேட்டர்களில் சரவெடியாக வெளியாகி இருக்க வேண்டிய படம். இந்த பொங்கலுக்கு தியேட்டரில் வேட்டுச் சத்தம் கன்ஃபார்ம் என டிரெய்லர் முழுக்கவே துப்பாக்கி குண்டுகள் நம்மையே துளைத்து விடும் போலத்தான் தெரிகிறது. தனுஷ் இந்த படத்துக்கு எனை நோக்கிப் பாயும் தோட்டா என்று கூட டைட்டில் வைத்திருக்கலாம்.
பீரியட் படமாகவும் போர் சூழலில் ஆங்கிலேயர்களில் சிக்கித் தவித்து வாழும் மக்கள் புரட்சி வீரர்களாக மாறி வெள்ளையர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி அடித்து துவம்சம் செய்யும் படமாக இந்த கேப்டன் மில்லர் உருவாகி இருக்கிறது டிரெய்லரை பார்த்தாலே தெளிவாக தெரிகிறது.

லோகேஷ் கனகராஜ் எல்லாம் எம்மாத்திரம்: தனது படங்களில் தொடர்ந்து வன்முறை காட்சிகளாக எடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ் அவருக்கு மனநல பரிசோதனை செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளதே அருண் மாதேஸ்வரனுக்கு அப்படி எத்தனை வழக்கு போட ரெடி என்கிற கேள்வியுடன் அணுகுண்டாக வெளியாகி இருக்கிறது கேப்டன் மில்லர் படத்தின் டிரெய்லர்.

அயலானுக்கு ஆப்பு: அனிமல், சலார் என வரிசையாக ஏ சான்றிதழ் படங்கள் ஹிட் ஆகி வரும் நிலையில், அந்த வரிசையில் அடுத்து கேப்டன் மில்லர் படத்திலும் பெரிய பெரிய துப்பாக்கிகளுடன் தனுஷ் சண்டை போடுகிறார். கண்டிப்பாக கேப்டன் மில்லர் படத்தின் டெக்னிக்கல் தரத்துக்கு முன்னாடி சிவகார்த்திகேயனின் ஏலியன் அயலான் தாக்குப்பிடிப்பது கஷ்டம் தான்.
சிவராஜ்குமாரை பெருசா காட்டல: இந்த படத்தில் மெயின் வில்லனே சிவராஜ்குமார் தானா? என்கிற கேள்வியை இந்த டிரெய்லரும் கிளப்புகிறது. ஆங்கிலேயர்களை காட்டும் டிரெய்லரில் தனுஷ் தான் முழுக்க நிறைந்திருக்கிறார். பிரியங்கா மோகனுக்கு பல ஷாட்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிவராஜ்குமாருக்கு ஒரெ ஒரு ஷாட் மட்டுமே டிரெய்லரில் வைத்துள்ளனர்.
ரத்தமும் சத்தமும்: உலகத்தர்த்தில் ஒரு போர் படத்தை தனுஷை வைத்து அருண் மாதேஸ்வரன் கொடுக்க உள்ளார் என்றே தெரிகிறது. சுதந்திர பின்னணி என்பதால் வலுவான திரைக்கதைக்கும் பஞ்சம் இருக்காது என்றே தெரிகிறது. ரத்தமும் சத்தமும் அதிகம் உள்ள கேப்டன் மில்லர் பொங்கல் ரேஸில் வெற்றிக் கொடி நாட்டுவார் என்றே தெரிகிறது. ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை மிரட்டல். டிரெய்லரை பொறுத்தவரையில் நேற்று வெளியான அயலான் மற்றும் அடுத்து வெளியான மிஷன் 1 படங்களை விட தாறுமாறாக கேப்டன் மில்லர் உள்ளது என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.


Click it and Unblock the Notifications











