தனுஷின் பிள்ளைகள் ஐஸ்வர்யாவுடன்தான் இருக்கிறார்களா?.. ட்ரெண்டாகும் புதிய வீடியோ

சென்னை: தனுஷும் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க இரண்டு பேரும் கடந்த வருடம் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றார்கள். அது அவர்களது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இப்படிப்பட்ட சூழலில் புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

தனுஷை சுற்றி சர்ச்சைகள் எழுவது ஒன்றும் புதிதில்லை. ஆரம்பத்தில் மிகப்பெரிய விமர்சனங்களையும், உருவ கேலிகளையும் சந்தித்த அவர்; ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்தபோதும் பல விமர்சனங்களை சந்தித்தார். ரஜினி வீட்டு மருமகன் ஆனதும் தனுஷுக்கு இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையா என்று பலரும் ஓபனாகவே பேசினார்கள். சிலர் பொறாமையும் பட்டார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் வீட்டு மருமகன் என்பது பெருமை என்பதை தாண்டி பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட்டார் தனுஷ்.

Dhanush Aishwarya Rajinikanth

சிறந்த நடிகர்: எந்த இடத்திலும் ரஜினியின் மருமகன் என்ற அடையாளம் தன் மீது விழாத மாதிரி பார்த்துக்கொண்டார். படிப்படியாக தனது திறமையை வளர்த்துக்கொண்டு வாய்ப்புகளை பெற்றார். கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ரஜினியின் மகள் ஐஸ்வர்யா என்ற பெயரை தாண்டி தனுஷின் மனைவி ஐஸ்வர்யா என்ற பெயர் வருவதற்கு காரணம் ஆனார். தனுஷும், ஐஸ்வர்யாவும் சுமூகமாகத்தான் தங்களது வாழ்க்கையை நகர்த்தினார்கள்.

விவாகரத்து: ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை இரண்டு பேரும் பிரிவதாக சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார்கள். அதேசமயம் விவாகரத்து மனுவை தாக்கல் செய்யாமல் இருந்ததால்; எப்படியாவது அவர்களை சேர்த்துவைத்துவிட வேண்டுமென்று ரஜினிகாந்த் முதற்கொண்டு பலரும் முயன்று பார்த்தார்கள். ஆனால் இவர்கள் பிடி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. சூழல் இப்படி இருக்க குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவையும் தாக்கல் செய்து சட்டப்பூர்வமாக கடந்த வருடம் விவாகரத்தும் பெற்றுவிட்டார்கள்.

யாத்ரா, லிங்கா: இதற்கிடையே அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் மூத்த மகனான யாத்ரா 21ஆம் தேதி வெளியாகப்போகும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் இடம்பெற்றிருக்கும் கோல்டன் ஸ்பாரோ பாடலில் சில ஹூக் வரிகளை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லிங்காவின் பிளான் என்னவென்பது இனி வரும் காலங்களில்தான் தெரியும். சூழல் இப்படி இருக்க தாயும், தந்தையும் பிரிந்துவிட்டதால் அவர்கள் யாருடன் இருப்பார்கள் என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருந்தது.

ட்ரெண்டாகும் வீடியோ: இரண்டு பேரையும் தனுஷும், ஐஸ்வர்யாவும் கோ பேரண்டிங் முறையில் வளர்க்கிறார்கள் என்றே தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்நிலையில் புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது இரண்டாவது மகனான லிங்கா தனது தாய் ஐஸ்வர்யாவுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நேற்று சென்றார். இரண்டு பேரும் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அப்போ மகன்கள் ஐஸ்வர்யாவுடன்தான் இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X