Dhanush: மொட்டைத்தலையில் முடி வளரணும்.. டி50 சூட்டிங்கில் காத்திருக்கும் தனுஷ்!
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக தன்னுடைய டி50 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் தனுஷ்.
ப பாண்டி படத்திற்கு பிறகு டி50 படத்தை இயக்கி நடிக்கவுள்ளார் தனுஷ். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது.

மொட்டைத்தலையில் முடி வளர காத்திருக்கும் தனுஷ்: நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையை கொண்டவர் தனுஷ். தமிழில் மட்டுமில்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என தன்னுடைய படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் சார் படம் டோலிவுட்டில் நேரடியாக வெளியாகி சிறந்த வசூலையும் வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக இவரது நடிப்பில் கேப்டன் மில்லர் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், தற்போது தனுஷின் டி50 படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது. இந்தப் படத்தை தனுஷ் இயக்கி நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகவுள்ளது. கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் லேசான முடியுடன் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங்கை முடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருப்பதியில் தன்னுடைய மகன்களுடன் மொட்டை போட்டார் தனுஷ். இந்நிலையில் டி50 படத்தின் சூட்டிங்கையும் துவங்கியுள்ள தனுஷ், சென்னையில் படத்தின் சூட்டிங்கை 600 வீடுகள் கொண்ட செட்டுடன் துவங்கியுள்ளார். படத்தில் அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது ஆதித்யராம் ஸ்டூடியோசில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன் தொடர்பான காட்சிகளை எடுத்து வருகிறார் தனுஷ். தன்னுடைய மொட்டைத்தலையில் இன்னும் கேரக்டருக்கு தேவையான முடி வளராத நிலையில், தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் சூட்டிங் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டைட்டில் அறிவிப்பு வரும் 28ம் தேதி தனுஷ் பிறந்தநாளையொட்டி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா உள்ளிட்டவர்கள் நடிப்பில் ப பாண்டி படத்தை இயக்கியிருந்தார் தனுஷ். படத்தில் தனுஷ், மடோனா ஆகியோரும் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். இந்நிலையில் தனுஷ் இயக்கத்தில் இரண்டாவது படமாக தற்போது டி50 படம் உருவாகிவருகிறது. படத்தில் தனுஷிற்கு த்ரிஷா ஜோடியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முந்தைய படம்போல இல்லாமல் இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











