போக்கிரி படக் கதை தான் தனுஷின் 55வது படக் கதையா?.. டைட்டில் என்ன தெரியுமா?.. அமரனை மிஞ்சுமா?

சென்னை: துரந்தர் படமே போக்கிரி படக் கதை தான் என விஜய் ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு ஸ்பை த்ரில்லர் படங்களின் பெரும்பாலான படங்கள் ஒரே மாதிரியான கதையை கொண்டிருந்தாலும், ஸ்க்ரீன்பிளேவில் காட்டும் வித்தையில் தான் படங்கள் வெல்கின்றன.

ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் படமெல்லாம் ரசிகர்களை அழ வைத்து அனுப்பாத குறையாக இருந்த நிலையில், அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ஸ்பை த்ரில்லர் படத்தின் கதை குறித்தும் டைட்டில் குறித்தும் சில தகவல்கள் கசிந்துள்ளன.

Dhanush s D55 Story and Title buzz sparks debate in social media

இந்த படத்தில் ஃபங்க் வைத்துக் கொண்டு வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ள தனுஷ் சாய் பல்லவி, ஸ்ரீலீலாவுடன் வெறித்தனமாக டான்ஸ் ஒன்றையும் ஆடியுள்ளார் என்கின்றனர்.

கவுத்துவிட்ட கர: ஓடிடியில் வெளியான பின்னர் கூட தனுஷின் கர படம் ரசிகர்கள் மத்தியில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. படம் ரொம்பவே ஸ்லோவாக செல்வது தான் பெரிய பிரச்னை என்றும் தனுஷ் கதாபாத்திரம் ரொம்பவே டார்க்காக சென்றாலும் படம் பல இடங்களில் சுவாரஸ்யமே இல்லாமல் தடுமாறியதும் ஏற்கனவே வங்கிகளில் நடக்கும் மோசடிகளை அஜித்தின் துணிவு திரைப்படம் இதைவிட அழுத்தம் திருத்தமாக எடுத்து சொல்லியதும் இந்த படத்தை காப்பாற்ற முடியாமல் போக காரணம் என்கின்றனர்.

தொடர்ந்து சொதப்பல்: தனுஷுக்கு கடைசியாக ராயன் திரைப்படம் 150 கோடி வசூலை கொடுத்தாலும் அந்த படமே விமர்சன ரீதியாக அடிவாங்கியது. தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் கோபம், அவர் இயக்கி நடித்த இட்லி கடை உள்ளிட்ட படங்களும் சொதப்பிய நிலையில், போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா எப்படியாவது வெற்றியை தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் சொதப்பி விட்டார். இந்நிலையில், அமரன் இயக்குநரைத்தான் ரசிகர்கள் மலைபோல நம்பியுள்ளனர்.

செழியன் தான் டைட்டில்?: தனுஷ் ஃபங்க் எல்லாம் வைத்துக் கொண்டு ஸ்டைலாக இருக்க Aura எனும் டைட்டிலில் படம் உருவாகப் போகிறதா? என கேள்விகள் கிளம்பிய நிலையில், செழியன் கதாபாத்திரத்தில் தான் தனுஷ் நடித்து வருகிறார் என்றும் அமரன் படத்தை போலவே செழியன் என தமிழில் தலைப்பு வைக்க முடிவு செய்துவிட்டதாகவும் கூறுகின்றனர். தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனுஷ் தமிழில் தலைப்புகளை தேர்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

போக்கிரி கதை: மம்மூட்டி மிகப்பெரிய மாஃபியா டானாக உள்ள நிலையில், அவரது கோட்டைக்குள் சாதாரண அடியாளாக உள்ளே புகுந்து அவரது மொத்த நெட்வொர்க்கையும் கண்டுபிடித்து லாக் செய்யும் ஸ்பையாக தனுஷ் நடித்து வருவதாக சில தகவல்கள் சினிமா வட்டாரத்தில் அடிபடத் தொடங்கியுள்ளன. விஜய்யின் போக்கிரி, சிம்புவின் பத்து தல என பல படங்களில் இதே கதை தானே என்றும் இந்த முறை தனுஷுக்கு மிஸ்ஸே ஆகக் கூடாது என ரசிகர்கள் படத்தை ரொம்பவே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். விரைவில் தனுஷ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X