Dhanush - அது ரொம்ப ரொம்ப எமோஷனல்.. தனுஷ் போட்ட ட்வீட்.. மீண்டும் ஐஸ்வர்யாவுடன் இணைய தூதா?
சென்னை: Dhanush (தனுஷ்) 3 படம் குறித்து தனுஷ் போட்டிருக்கும் ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் கடைசியாக வாத்தி படத்தில் நடித்தார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான அப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை நிலைநிறுத்தலாம் என்ற தனுஷின் ஆசை நிராசையானது. அந்தப் படத்துக்கு பிறகு தனுஷ் இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார்.

கேப்டன் மில்லர்: தியாகராஜா குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து சாணிக்காயிதம், ராக்கி படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் அருண் மாதேஸ்வரன். அவரது இயக்கத்தில் கேப்டன் மில்லர் உருவாகியிருப்பதால் நிச்சயம் இந்தப் படம் சூப்பர் ஹிட்டாகி கவனம் ஈர்க்கும் என்று தனுஷும், அவரது ரசிகர்களும் எதிர்பார்த்திருக்கின்றனர்.
தனுஷ் 50: இந்தச் சூழலில் சமீபத்தில் தனுஷின் 50ஆவது படம் குறித்த அப்டேட் தெரியவந்தது. அதன்படி படத்தை அவரே இயக்கவிருக்கிறார். வடசென்னையை மையமாக வைத்து உருவாகவிருக்கும் அப்படத்துக்கு ராயன் என பெயரிடப்படலாம் என்று கூறப்படுகிறது. படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஏற்கனவே ராஜ்கிரணை வைத்து தனுஷ் இயக்கிய பவர்பாண்டி படம் பலத்த வரவேற்பைப் பெற்றதால் நிச்சயம் இந்தப் படமும் அருமையாக இருக்கும் என அவரது ரசிகர்கள் நினைக்கின்றனர்.
திருமணமும் பிரிவு: இதற்கிடையே அவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த திருமண வாழ்க்கை இப்போது பிரிவில் இருக்கிறது. அதேசமயம் இரண்டு பேரும் இன்னும் விவாகரத்து வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எமோஷனல் பதிவு: சூழல் இப்படி இருக்க ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படம் ரீ ரிலீஸானது. அதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "3 ரீ ரிலீஸ்.ரெஸ்பான்ஸை பார்த்து ரொம்பவே எமோஷனல் ஆகிவிட்டேன். அனைவருக்கும் எனது நன்றிகள்" என குறிப்பிட்டிருக்கிறார். இந்த ட்வீட் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
இதற்கிடையே இதனை பார்த்த ரசிகர்கள் 3 படம் குறித்து இப்படி எமோஷனல் ஆகிறாரே தனுஷ். அப்போ அந்தப் படம் அவருக்கு எவ்வளவு கனெக்ட் ஆகியிருக்க வேண்டும். இந்த ட்வீட்டின் மூலம் ஐஸ்வர்யாவுக்கு தனுஷ் தூது விடுகிறாரோ என சந்தேகத்தை எழுப்பிவருகின்றனர். ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாமும், தனுஷ் நடித்த கேப்டன் மில்லரும் பொங்கலுக்கு ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











