இட்லி கடை படத்தில் வரும் கருப்பசாமி கோயில்.. தனுஷ் அப்பாவுக்கு இப்படி ஒரு சென்ட்டிமென்ட்டா?.. வேற லெவல்

சென்னை: இட்லி கடை படத்தை தனுஷே இயக்கி நடித்திருக்கிறார். அவருடன் ராஜ்கிரண், அருண் விஜய், சத்யராஜ், நித்யா மேனன் என பலர் நடித்திருக்கிறார்கள். ஃபீல் குட் படமாக அமைந்துவிட்டதாக படம் பார்த்த ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ்தான். இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருந்த கருப்பசாமி கோயில் பற்றி தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பேசியிருக்கிறார்.

தனுஷ் நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் மாறியிருக்கிறார். அவர் தந்தை போன்றே இயக்குநராக தனது முதல் படத்தை ராஜ்கிரணை வைத்து இயக்கியிருந்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் நடிப்பில் மட்டும்தான் கில்லி என்று பார்த்தால் இயக்கத்திலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிட்டாரே என்று ரசிகர்கள் வரவேற்பை கொடுத்தார்கள். அடுத்ததாக இயக்கிய ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் படுத்துவிட்டன.

இட்லி கடை: சூழல் இப்படி இருக்க நான்காவது முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்த அவர்; இட்லி கடை படத்தை இயக்கினார். அவரே அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தது. படமானது சில நாட்களுக்கு முன்பு ஓவர் ஹைப்போடு திரையரங்குகளில் வெளியானது.

Dhanush s father speaks sentimentally about the Karuppasamy temple in the film Idli Kadai
Photo Credit:

எப்படி இருக்கு படம்?: இந்தப் படத்தின் கதையை தனது கற்பனையோடு சேர்த்து; சிறு வயதில் தனது சொந்த ஊரில் பார்த்த கதாபாத்திரங்கள், சம்பவங்கள் ஆகியவைகளை அடிப்படையாக வைத்து எழுதியிருந்தார். மேலும் தனது பாட்டியையும் ஒரு ரோலில் நடிக்க வைத்திருந்தார் அவர். படத்தை பார்த்த ரசிகர்கள், ஏகபோகமாக கொண்டாடிவருகிறார்கள். சமீபத்தில் வந்த படங்களுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்று கூறினார்கள்.

என்ன ஸ்பெஷல்?: படத்தின் மேக்கிங்தான் தரமாக அமைந்துவிட்டது. தேனி சுற்று வட்டார லொக்கேஷன்கள், தனுஷ் எழுதிய வசனங்கள் என அத்தனை ஏரியாக்களிலும் படம் சிக்சர் அடித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் அவருக்குள் இப்படி ஒரு இயக்குநரா என ரசிகர்கள் வியந்துதான் போயிருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க படத்தில் கருப்பசாமி கோயில் ஒன்று வரும். அதுதான் தனுஷுக்கு உண்மையிலேயே குல தெய்வ கோயில் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கஸ்தூரி ராஜா பேட்டி: இந்நிலையில் தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா அந்தக் கோயில் குறித்து சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "நான் வேலையில் இல்லாதபோது அந்த கருப்பசாமி கோயிலில்தான் மாலை போய் உட்கார்ந்திருப்பேன். அங்கு அமைதி கிடைக்கும். மேலும் சென்னைக்கு போகலாமா வேண்டாமா என்று அந்த கோயிலில்தான் சகுனம் கேட்டேன். ஏனெனில் அப்போதே எனக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். குழப்பமாக இருக்குமில்லையா. எனவே அந்தக் கோயிலில்தான் சென்னை செல்லலாமா வேண்டாமா என்று கேட்டேன். சகுனம் சொன்னது. நான் சென்னை வந்தேன். இதை மூட நம்பிக்கை என்று சொன்னாலும் பரவாயில்லை. எனக்கு அதுதான் நம்பிக்கை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X