இழுத்து மூடிய இட்லி கடை.. கரை சேருமா ‘கர’.. தனுஷ் படத்துக்கு டிக்கெட் புக்கிங் எப்படி இருக்கு?

சென்னை: விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு, கே.எஸ். ரவிகுமார், சுராஜ் வெஞ்சரமுடு, ஜெயராம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள 'கர' படம் ஏப்ரல் 30 (நாளை) திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.

கர படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், ரிலீஸில் எந்தவொரு சிக்கலும் இல்லை என்கின்றனர். டிக்கெட் முன் பதிவு ஓபன் செய்யப்பட்டு ஒரு நாள் ஆன நிலையில், இன்னமும் பல தியேட்டர்களில் பெரிதாக டிக்கெட் புக்கிங் நடைபெறவில்லை என்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Dhanush s Kara Movie Advance Ticket Booking status are very dull
Photo Credit:

கர படத்துக்கு ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி என இதுவரை பிரம்மாண்டமாக படக்குழு 2 புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தினாலும் இன்னமும் ரசிகர்கள் மத்தியில் தனுஷ் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட வேண்டும் என்கிற ஆர்வம் எழவில்லை என்றே தெரிகிறது.

தமிழ்நாட்டில் டல் அடிக்கும் தனுஷ்: கடந்த ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் பெரிதாக ஓடவில்லை. தனுஷ் நடித்து வெளியான குபேரா மற்றும் தேரே இஷ்க் மெயின் படங்கள் தெலுங்கு மற்றும் இந்தியில் 100 கோடி வசூல் ஈட்டின. ஆனால், தமிழ்நாட்டில் அந்த படங்களும் பெரிதாக ஓடவில்லை. காந்தாரா 2 படத்துடன் வெளியான இட்லி கடை படமும் பெரிதாக வசூல் ஈட்ட முடியாமல் திணறியது.

டிக்கெட் முன் பதிவு தொடக்கம்: வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் தான் 'கர'. வரும் ஏப்ரல் 30ம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் வெளியாகிறது. பொதுவாகவே தமிழ்நாட்டில் தனுஷ் படங்களுக்கு டபுள் டிஜிட் ஓபனிங் இருந்து வந்தன. ஆனால், சமீப காலமாக அவர் நடித்த படங்கள் சரியாக பாக்ஸ் ஆபீஸில் போகாத நிலையில், 'கர' படம் அதை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கான முன் பதிவு நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

பல இடங்களில் பச்சை நிறம்: தனுஷின் கர படத்தின் பெயரே தயாரிப்பாளருக்கும் நடிகை மமிதா பைஜுவுக்கும் சரியாக தெரியவில்லை என ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தனுஷ் பேசினார். படம் வெளியாவதே பலருக்கும் தெரியவில்லை என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். முன்னணி நடிகர்களின் படங்களுக்கு முதல் நாள் அதிகபட்சம் ஓபனிங் இருக்கும். ஆனால், சமீப காலமாக தனுஷ் அதை தவறவிடுவது ஏன் என்கிற கேள்வி தான் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பல இடங்களில் பச்சை நிறமாகத்தான் டிக்கெட் புக்கிங் இதுவரை காணப்படுகிறது. இந்த ஆண்டு வெளியான பராசக்தி, தாய் கிழவி, யூத் படங்களின் வசூலை 'கர' முறியடிக்குமா? என்பதை வெயிட் பண்ணிப்பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X