Kara Day 2 Box office: கரை சேர்ந்தாரா தனுஷ்? ‘கர‘ படத்தின் இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: போர் தொழில் என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் கர.
மமிதா பைஜு, ஜெயராம், கருணாஸ், சுராஜ் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 30ந் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தனுஷின் கர: தனுஷ் இயக்கி நடித்த 'இட்லி கடை' படத்தை தொடர்ந்து, போர் தொழில் படத்தின் மூலம் அனைவராலும் கவனிக்கப்படக்கூடிய நடிகராக மாறிய விக்னேஷ் ராஜா இயக்கி திரைப்படம் கர. 1991 கால கட்டத்தில் ராமநாதபுரம் பின்னணியில் உருவான திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படம் ஆரம்பிக்கும் போதே தனுஷ், ப்ரித்வி இருவரும் எம்.எல்.ஏ வீட்டில் திருடுகின்றனர். இதில், தனுஷ் மட்டும் மாட்டிக்கொள்ள, போலீசான சுராஜ், தனுஷ் மீது பல வழக்குகளை போட்டு சிறையில் அடைக்க முயற்சி செய்கிறார்.

கதை: இதை தெரிந்து கொண்ட தனுஷ் தப்பித்து ஓடி ரேணிகுண்டாவுக்கு சென்று விடுகிறார். அங்கு மமிதா பைஜுவை சந்தித்து வாழ்கிறார். வாழ்க்கை நடத்தவே கஷ்டமாக இருப்பதால், சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்யும் தனுஷ், பண தேவைக்காக சொந்த ஊரில் அப்பாவை சந்திக்க வருகிறார். அப்போது தான் வங்கியில் நிலத்தை அடமானம் வைத்து இருப்பதும், பணத்தை கட்டாததால் வங்கி நிலத்தை ஜப்தி செய்ய அப்பா கே.எஸ்.ரவிக்குமார் இறந்து போகிறார். அதன் பின் என்ன நடந்தது என்பது தான் கர திரைப்படத்தின் கதை.
2ம் நாள் வசூல்: படம் வெளியான முதல் நாளே மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கர படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 5.85 கோடியை வசூலித்தது. இந்திய அளவில் ரூ.6.20 கோடியை வசூலித்தது. இரண்டாவது நாளான நேற்று மே1 ந் தேதி விடுமுறை தினம் என்பதால் படம் ரூ.6.95 கோயை வசூலித்துள்ளது. இன்று நாளையும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications