Kuberaa Box Office Prediction: குபேரா படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?.. முதல் நாள் வசூல் கணிப்பு இதோ!

சென்னை: இந்த வாரம் வெள்ளிக்கிழமை தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா, பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள குபேரா திரைப்படம் திரைக்கு வருகிறது. இந்தியாவில் 3000 ஸ்க்ரீன்கள் மற்றும் ஓவர்சீஸில் 1000 திரைகள் என ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 4000 திரைகளில் குபேரா படத்தை படக்குழு வெளியிடுகிறது.

2000ம் ஆண்டு வெளியான டாலர் ட்ரீம்ஸ் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சேகர் கம்முலா 25 ஆண்டுகளில் அதிகபட்சமாக இதுவரை 9 படங்களை மட்டுமே இயக்கி வெளியிட்டுள்ளார். பொறுமையாக நிறுத்தி நிதானமாக ஸ்க்ரிப்ட் வொர்க்கை முடித்து விட்டு ஷூட்டிங் போனாலும், தனக்கு தேவையான விஷுவல்ஸ் வரும் வரை மனுஷன் ரொம்பவே வெயிட் பண்ணுவார். அதுதான் அவருடைய ஸ்டைல் ஆகவும் உள்ளது.

Dhanush s Kuberaa Movie Budget Salary and Day 1 Box Office Prediction is here in Tamil
Photo Credit:

ஆனந்த், கோதாவரி, ஹேப்பி டேஸ், லீடர், லைஃப் இஸ் பியூட்டிஃபுல், அனாமிகா, ஃபிடா, லவ் ஸ்டோரி படங்களுக்குப் பிறகு 10வது படமாக 2021ம் ஆண்டுக்குப் பிறகு குபேரா படத்தை இயக்கியுள்ள சேகர் கம்முலா வரும் ஜூன் 20ம் தேதி அந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

120 கோடி பட்ஜெட்: தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா, பாக்கியராஜ், ஜிம் சார்ப், சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். "போய் வா நண்பா" பாடல் ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 100 கோடி ரூபாய் என்றும் விளம்பரங்கள் மற்றும் புரமோஷன்களுக்கான செலவு மட்டும் 20 கோடி என்றும் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 120 கோடி பட்ஜெட்டில் குபேரா படம் உருவாகியுள்ளதாக டோலிவுட் சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

தனுஷ் சம்பளம்: சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள குபேரா படத்துக்காக நடிகர் தனுஷ் 30 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாகார்ஜுனாவுக்கு 7 கோடி ரூபாய் என்றும் ராஷ்மிகா மந்தனாவுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. படக்குழுவினரின் சம்பளத்தை நீக்கி விட்டு பார்த்தால் 50 கோடிக்கும் குறைவான பொருட்செலவில் தான் இந்த படத்தை சேகர் கம்முலா இயக்கியிருப்பார் என தெரிகிறது.

டிக்கெட் புக்கிங் தொடக்கம்: ஹைதராபாத்தில் குபேரா படத்தின் டிக்கெட் புக்கிங் அனைத்து திரையரங்குகளிலும் தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில், இதுவரை வெறும் 4 திரையரங்குகளில் மட்டுமே டிக்கெட் புக்கிங் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன. இன்று இரவு அல்லது நாளைக்குள் அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட் புக்கிங் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நாள் வசூல் கணிப்பு: அதிகபட்சமாக உலகளவில் 4000 ஸ்க்ரீன்களில் குபேரா படம் வெளியாகவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 10 கோடி ரூபாய்க்கும் மேல் முதல் நாள் ஓபனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சேர்த்து 10 முதல் 12 கோடி வரை முதல் நாள் வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குபேரா படத்தின் கதை மற்றும் ஸ்க்ரீன்பிளே ரசிகர்களை கவர்ந்து விட்டால், தனுஷுக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனை படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஷ்மிகா மந்தனா நடித்தாலே அந்த படங்கள் குறைந்தது 500 கோடி வசூலாவது ஈட்டி வருகிறது என்கிற நிலையில், பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம், தியேட்டர் ஆடியன்ஸை கவரவில்லை என்றால், முதல் 3 நாட்களுக்குப் பிறகு வசூல் குறைந்துவிடும் என்பதும் நிதர்சனம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X