Maamannan: மாமன்னன் படத்துக்கு தனுஷ் விமர்சனம்.. கமெண்ட்டில் ரசிகர்கள் என்னென்ன சொல்றாங்க பாருங்க!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் படத்தில் நடித்த நடிகர் தனுஷ் மாமன்னன் படத்துக்கு முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் ஃபாசில் மற்றும் வடிவேலு நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள மாமன்னன் திரைப்படம் நாளை வெளியாகிறது.
மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சையாக வெடித்த நிலையில், அந்த படத்துக்கு ஹைப்பே இல்லாமல் இருந்த நிலையில், தனுஷ் பதிவிட்ட ஒரு ட்வீட் ரசிகர்களை டிக்கெட் எடுக்க தூண்டி உள்ளது.
Maamannan by @mari_selvaraj is an emotion ♥️ A big hug to you Mari. Vadivelu sir and @Udhaystalin have delivered a very convincing performance. Great work from Fahadh and @KeerthyOfficial. Theatres are gonna erupt for the interval block. finally @arrahman sir 🙏🙏♥️ BEAUTIFUL
— Dhanush (@dhanushkraja) June 28, 2023
மாமன்னனுக்கு தனுஷ் ஆதரவு: மாரி செல்வராஜின் மாமன்னன் படம் ஒரு எமோஷன்.. வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளனர். பகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷின் பங்களிப்பு மிக அருமை. இடைவேளை காட்சியின் போது தியேட்டரே தெறிக்கப் போகுது என நடிகர் தனுஷ் மாமன்னன் படத்தை பாராட்டி ட்வீட் போட்டு தனது ஆதரவை கொடுத்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் படத்தில் தனுஷ் நடித்த நிலையில், மாமன்னன் படத்துக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார் என்றும் தனுஷே சொல்லிவிட்டார் படத்துக்கு டிக்கெட் போட்டு விட வேண்டியது தான் என ரசிகர்கள் போட்டுள்ள கமெண்ட்டுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

ரசிகர்கள் கமெண்ட்ஸ்: அண்ணா அவன் கூட சேராதீங்க என்றும் மாரிக்கெல்லாம் விஷ் பண்ணாதீங்க ப்ரோ என்றும் கொடுத்த காசுக்கு மேல கூவுறான் என்றும் ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்டுகள் தனுஷ் ட்வீட்டுக்கு கீழ் குவிந்து வருகின்றன.
தங்கம்னா நீங்க: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்துக்கு ஹைப் இல்லாத நிலையில், நடிகர் தனுஷ் போட்ட இந்தவொரு ட்வீட் வேறலெவல் ஹைப்பை கொடுத்திருப்பதாகவும் ஜெம்னா நீங்க என ரசிகர்கள் கர்ணன் தனுஷை கொண்டாடி வருகின்றனர்.
தனுஷ் பார்த்துட்டே படம் சூப்பர்னு சொல்லிடாரு, உடனே மாமன்னன் படத்துக்கு டிக்கெட் போட்டு விட வேண்டியது தான் என ரசிகர்கள் மாமன்னன் படத்துக்கு டிக்கெட் புக் செய்ய ஆரம்பித்து விட்டனர்.


Click it and Unblock the Notifications











