விஜய்யை பற்றி தனுஷ் மருமகன் ஓவர் புகழ்ச்சி.. என்னவெல்லாம் சொல்லிருக்காரு பாருங்க!
சென்னை: தனுஷின் சகோதரி மகன் பவிஷ். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் தோல்வியடைந்தாலும் பவிஷுக்கு ஓரளவு வெளிச்சம் கிடைத்தது. அடுத்ததாக லவ் ஓ லவ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஜூலை பத்தாம் தேதி இந்தப் படம் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர்; விஜய் குறித்து பேசியிருக்கிறார்.
இந்திய அளவில் சிறந்த நடிகராக தன்னை நிரூபித்திருக்கிறார் தனுஷ். இரண்டு முறை தேசிய விருதுகளை வென்றிருக்கும் அவர்; நடிகராக மட்டுமின்றி இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல முகங்களை கொண்டிருப்பவர். அவர் இயக்கிய முதல் படமான பவர் பாண்டி மெகா ஹிட்டடித்தது. அவரது இயக்கத்தை பார்த்து அனைவருமே ஆச்சரியப்பட்டு போனார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தப் படத்துக்கு பிறகு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கினார்.

சகோதரி மகன் ஹீரோ: அப்படத்தில் தனது சகோதரி மகன் பவிஷை ஹீரோவாக களமிறக்கினார். தன்னுடைய அத்தனை ஐடியாக்களையும் கொடுத்தும், அனைத்து விஷயங்களையும் பக்குவமாகவும் சொல்லிக்கொடுத்து பவிஷை நடிக்க வைத்திருந்தார். அவரும் ஓரளவுக்கு தேறியிருந்தார் என்றே சொல்ல வேண்டும். படம் தோல்வியடைந்தாலும் பவிஷுக்கு தேவையான வெளிச்சமும் பெயரும் கிடைத்துவிட்டது. அவரும் தன் மாமாக்கள் செல்வராகவன், தனுஷ் போன்று சினிமாவில் பெரிய கையாக வருவார் என்று குடும்பத்தினர் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
அடுத்த படம்: அடுத்ததாக பவிஷ் நடிப்பில் லவ் ஓ லவ் திரைப்படம் ஜூலை பத்தாம் தேதி வரவிருக்கிறது. அதனையொட்டி ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. அப்படி ஒரு பேட்டியில் கலந்துகொண்ட அவர் விஜய் குறித்து பேசினார். அவர் பேசுகையில், 'விஜய் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன். அவர் பயங்கரமான உழைப்பாளி என்று நிறைய பேர் எனக்கு சொல்வார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் அப்படி இருப்பார், இப்படி இருப்பார் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
எளிமையான விஜய்: அதேபோல் அவரது எளிமையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். எவ்வளவு பெரிய இடத்துக்கு போனாலும் அவர் எளிமையாகவே இருக்கிறார். அவருடைய குட்டி குட்டி ரியாக்ஷன்ஸ், நுணுக்கங்கள் எல்லாம் எனக்கு பிடிக்கும். அவர் அவ்வளவு சூப்பராக அவற்றைச் எய்வாஅர். அதேபோல் நடனத்தை பார்த்தும் பிரமித்திருக்கிறேன். அவரைப் பற்றி நிறைய கதைகள் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
குடை பிடிக்கமாட்டார்: இன்றுவரைக்கும் அவருக்கு யாருமே குடை பிடிக்கமாட்டார்கள். அவருதான் பிடித்துக்கொள்வார். அந்த ஸ்டேஜுக்கு போயும் இப்படி இருக்கிறார். நடனம் என்றாலும் ஒத்திகை பார்த்துவிட்டுதான் வருவார். அதெல்லாம் கேள்விப்படும்போது நாம் இன்னும் கடினமான உழைப்பை போட வேண்டும். அவ்வளவு பெரிய ஆள் அவரே இப்படி உழைக்கிறார் என தோன்றும்" என்றார்.


Click it and Unblock the Notifications
