என் வாழ்க்கையில் முக்கியமானவர்.. எதை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்தார்.. தனுஷின் அக்கா மகன் நெகிழ்ச்சி!
சென்னை: நடிகர் தனுஷ் ராயன் படத்துக்குப் பிறகு தனது அக்கா மகன் பவிஷை வைத்து 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, அனிகா சுரேந்திரன், பிரியா வாரியார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படம் பிப்ரவரி 21ந் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கும் நிலையில், சென்னையில் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தனுஷின் அக்கா மகன் பவிஷ், இசை வெளியீட்டு விழா தானே பேசி விடலாம் என்று நினைத்து வந்தேன். ஆனால், இங்கு அனைவரையும் பார்த்தபோது எனக்கு கொஞ்சம் பதற்றமாகவே இருக்கிறது. இருந்தாலும் இந்த படத்தில் இந்த படத்தை இசை வெளியீட்டு விழாவிற்கு நேரம் ஒதுக்கி வந்ததற்கு அனைவருக்கும் நன்றி.இந்தப் படத்திற்காக நிறைய பேர் எனக்கு சப்போர்ட் பண்ணிருக்காங்க. அவங்க எல்லோருக்கும் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டிருக்கேன்.

அனைவருக்கும் நன்றி: அதில், முதலில் ஸ்ரேயாஸ் அண்ணாக்கு நன்றி சொல்லனும், அவர் ஒருநாள் திடீரென்று என்னை அழைத்து 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தில் நீ லீட் ரோல் பண்ற என்றார். இதைக் கேட்டு நான் பதறிப்போய் விட்டேன். எனக்கு கையும் ஓடவில்லை,காலும் ஓடவில்லை. அந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா. படத்தின் டிரைலர் பார்த்தேன், அது நான் தான் என்று என்னால் நம்பவே முடியல, அந்த அளவிற்கு என்னை அழகாக காமித்து இருக்கிறார்கள் அதற்கு நன்றி. அடுத்தாக அஷ்வத் அண்ணாவிற்கு நன்றி, நான் கேமிரா முன்னாடி இல்லை என்றால், அவர் கூடத்தான் இருப்பேன். அவர் தான் என்னை, கூலாகவே பார்த்துக்கொள்வார். அடுத்தாக இந்த படத்தில் நடித்த நடிகர்கள், அவர்கள் நடிகர்கள் என்பதைவிட, ப்ரெண்ட்ஸ்னுதான் சொல்லணும். நண்பர்களுக்குள் நன்றி, சாரி சொல்லக்கூடாது. அவுங்க கூட நடிச்சத்துல எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்.
வாழ்க்கையில் முக்கியமான நபர்: என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு நபராக இருக்கக்கூடிய தனுஷ் சாருக்கு ரொம்ப நன்றி. அவர் எனக்கு பண்ணிருக்க விஷயங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. எதை நம்பி எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்தீங்கன்னு தெரியல. ஆனா அதற்காக கடினமாக உழைப்பேன். வரும் பிப்ரவரி 21ந் தேதி படம் வெளியாக இருக்கிறது.படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு படம் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்க என்று அழகாக பேசினார் பவிஷ். தனுஷின் அக்கா மகனான பவிஷ் பார்ப்பதற்கு ஒரு சாயலில் தனுஷ் போலவே இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











