சூப் பாயாக மாறிய தனுஷ்?.. ஜிவி பிரகாஷ் கொடுத்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் அப்டேட்
சென்னை: தனுஷ் நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் தனது முத்திரையை பதித்துவருகிறார். அவர் இயக்கிய முதல் படமான பவர் பாண்டியில் காதலை அவர் கையாண்டிருந்த விதம் மிகச்சிறப்பாக இருந்ததாக ரசிகர்கள் கூறினார்கள். அதே எதிர்பார்ப்போடு தனுஷ் இயக்கிய ராயன் படத்தை பார்க்கப்போன ரசிகர்கள் ஏமாற்றதுடன் வெளியே வந்தனர். இந்தச் சூழலில் தனுஷ் தனது அக்கா மகனை ஹீரோவாக அறிமுகமாக்கி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
தனுஷ் கோலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்வரை சென்று தனது நடிப்பு திறமையை காண்பித்துவிட்டார். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை அனாயசமாக செய்யும் அவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பிராண்ட் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த அவர் பவர் பாண்டி படத்தில் இயக்குநராக அறிமுகமானார். ராஜ்கிரண், ரேவதி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ஒரு இயக்குநராகவும் தனுஷ் கவனம் பெற்றார்.

சறுக்கிய ராயன்: இதனையடுத்து தனது 50ஆவது படமான ராயனை அவரே இயக்கி நடிக்க செய்தார். கண்டிப்பாக ப.பா போல் இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. வானத்தைப் போல, வடசென்னை போன்ற படங்களின் கலவைதான் ராயன் என்றும்; திரைக்கதையில் ஒன்றுமே இல்லை; அவ்வளவு லாஜிக் மீறல்கள் என்று தொடர்ந்து விமர்சனத்தை முன்வைத்தார்கள் ரசிகர்கள். தான் இயக்கிய ராயன் சந்தித்த விமர்சனங்களால் அவர் கொஞ்சம் அப்செட் என்றும் கூறப்படுகிறது.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: சூழல் இப்படி இருக்க ராயன் படத்தின்போதே தனது மூன்றாவது படத்தின் இயக்க பணியில் இறங்கிவிட்டார் தனுஷ். அதன்படி தனது அக்கா மகனை ஹீரோவாக போட்டு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்குகிறார். இதில் அவரது அக்கா மகனுடன் அனிகா சுரேந்திரன், மாத்யூ தாமஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.
கோல்டன் ஸ்பாரோ: படத்திலிருந்து கோல்டன் ஸ்பாரோ பாடல் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்திருக்கிறது. அந்தப் பாடலில் சில வரிகளை தனுஷின் மூத்த மகன் எழுதியிருந்தார். பிரியங்கா மோகன் நடனம் ஆடியிருந்தார். ஜிவியின் இசை பெரிதாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஜிவி பிரகாஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திலிருந்து புதிய அப்டேட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
என்ன அப்டேட்?: அதன்படி படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் தனுஷு சூப் ஸோனுக்குள் மீண்டும் சென்றிருக்கிறார் என தெரிவித்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அடடா மீண்டும் சூப் ஸோனுக்குள் தனுஷா என்று ஆச்சரியத்துடன் மகிழ்ச்சியுமடைந்திருக்கிறார்கள். ஏனேனில் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் 'கொலவெறி' பாடல் சூப் ஜானரில் ரிலீஸாகியிருந்தது. அதனை தனுஷ் பாடியிருந்தார். பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது நினைவுகூரத்தக்கது.
அடுத்த படங்கள்: NEEK படத்தை இயக்கி முடித்திருக்கும் தனுஷ் அடுத்ததாக குபேரா படத்தில் நடித்துவருகிறார். இது தவிர்த்து இளையராஜா பயோபிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அதுமட்டுமின்றி இட்லி கடை என்ற படத்தை அவரே இயக்கி நடிக்கவும் இருக்கிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில்தான் வெளியானது.


Click it and Unblock the Notifications











