நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் விமர்சனம் எல்லாம் இப்பவே வர ஆரம்பிச்சிடுச்சே.. எஸ்.ஜே. சூர்யா ட்வீட்

சென்னை: அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தனுஷ் இயக்கத்தில் அவருடைய அக்கா மகன் பவிஷ் நடித்துள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் பிப்ரவரி 21ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திடீரென அந்த படத்துக்கான புரமோஷன் வேலைகளை இப்பவே தனுஷ் தரப்பு தீயாக நடத்தி வருவது ரசிகர்களையும் திரையுலகையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தை பார்த்தேன் என முதல் விமர்சனத்தை தட்டி விட்டிருந்தார். இந்நிலையில், அடுத்ததாக இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்திற்கு விமர்சனம் கொடுத்துள்ளார்.

neek review dhanush sj suryah


அக்கா மகனை அறிமுகப்படுத்த தனுஷ் இப்பவே புரமோஷன் யுக்திகளை பக்காவாக ஆரம்பித்துவிட்டாரா? அல்லது இவர்கள் எல்லாம் சொல்வது போல தனுஷ் அடுத்த தலைமுறையினருக்கான பக்காவான படத்தை கொடுத்துள்ளாரா என்பதை அறிந்துக்கொள்ள அடுத்த மாதம் படம் வெளியாகும் வரை காத்திருக்கத்தான் வேண்டும். எஸ்.ஜே. சூர்யா இந்த படத்திற்கு கொடுத்துள்ள விமர்சனம் குறித்து இப்போ பார்க்கலாம் வாங்க..

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் முதல் விமர்சனம்: சமீபத்தில், சில பிரபலங்களுக்கு இந்த படத்தை தனுஷ் டீம் போட்டுக் காட்டியிருக்கிறது. சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட தனுஷின் இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் முதல் நபராக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை பார்த்தேன். என்னவொரு ஃபீல் குட்டான க்யூட் படம் என்றும் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் அடிக்கும் என்றும் விமர்சனம் கொடுத்திருந்தார். அதற்கு தனுஷும் ட்விட்டர் பக்கத்தில் உடனடியாக நன்றி தெரிவித்தார்.

neek review dhanush sj suryah


எஸ்.ஜே. சூர்யா விமர்சனம்: கடந்த ஆண்டு தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய எஸ்.ஜே. சூர்யா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை சர்வதேச நடிகர் தனுஷ் சாருடன் இணைந்து பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. தரமான என்டர்டெயினர் படமாகவும் ஜென் Z இளைஞர்களுக்கான பக்காவான பேக்கேஜாகவும் இந்த படம் உருவாகியுள்ளது. தனுஷ் சார் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி தான். எப்படி இப்படியொரு பிசியான ஷெட்யூலிலும் உங்களால் இப்படியொரு அழகான படத்தை உங்களால் கொடுக்க முடிகிறது. ராயன் படத்துக்குப் பிறகு உங்கள் இயக்கத்தில் அடுத்த ஒரு தரமான படம் வெயிட்டிங். படத்தில் நடித்த அனைத்து இளம் நடிகர்களின் நடிப்பும் அருமை என பாராட்டியுள்ளார். தனுஷ் நன்றி: எஸ்.ஜே. சூர்யாவின் ட்வீட்டை பார்த்த தனுஷ், உங்களின் நேரத்தை ஒதுக்கி என்னோட படத்தை பார்த்து நாலு நல்ல வார்த்தை சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார், உங்களோட ரியாக்‌ஷன் பார்த்துட்டு என்னோட டீமே ரொம்ப ஹேப்பியா இருக்கு என பதிவிட்டுள்ளார். இன்னும் பல பிரபலங்களின் விமர்சனங்கள் மற்றும் பாராட்டு மழை படம் வெளியாவதற்கு முன்பாக வரிசைக் கட்டும் என எதிர்பார்க்கலாம் போல என ரசிகர்கள் தனுஷின் ட்வீட்டுக்கு கீழ் இப்பவே கமெண்ட்டுகளை குவிக்க ஆரம்பித்துவிட்டனர். பாடல்கள் ஹிட்டானதை போல படமும் ஹிட்டாகிவிட்டால் தனுஷின் அக்கா மகன் கோலிவுட்டுக்கு இந்த ஆண்டு சூப்பர் அறிமுகம் என்று தான் சொல்ல வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X