இது பையன்.. அது பொண்ணு..எக்ஸ்சுக்கு கல்யாணம்..நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் டிரைலர் எப்படி இருக்கு!

சென்னை: நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி கணிசமான வசூலை அள்ளியது.இந்த திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, தனுஷ் தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். முழுக்க முழுக்க இளசுகளின் காதல், ரொமான்ஸ், பிரேக் அப்பை வைத்து ஒரு ஜாலியான கதையை எடுத்து இருக்கிறார் தனுஷ். இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல திறமைகளைக் கொண்ட நடிகர் தனுஷ், பவர் பாண்டி படத்தை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து, தனுஷ் ராயன் படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருந்தாலும், தங்கை சென்டிமெண்டில் பாசாகி விட்டதால், படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனுஷ் தனது சகோதரி மகனையும், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியார் ஆகியோரை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். இப்படம் பிப்ரவரி 21ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

trailer dhanush

அட்டகாசமான டிரைலர்: அந்த டிரைலரின் ஆரம்பத்தில் சூட்கேட்டில் ஸ்டைலாக அமர்ந்து கொண்டு கையில் கிளாசை வைத்து கொண்டு, இது ரொம்ப சாதாரண கதை தான் என்று டிரைலருக்கு இன்ட்ரோ கொடுத்துள்ளார். அடுத்து வரும் தனுஷின் அக்கா மகன் பவிஷ், இது ஒரு பையன்...இது ஒரு பெண்ணு.. இந்த பையனும் பெண்ணும் காதலிக்கிறார்கள். அப்போ இந்த பையன் யாரு? அது தான் எக்ஸ் பாய் பிரண்டுக்கும் எக்ஸ் கேர்ள் பிரண்டுக்கும் கல்யாணம் என இந்த காலத்து இளசுகளை கவரும் படி, காதல், ரொமான்ஸ், டேட்டிங்,பிரேக் அப் என ஒரு ஜாலியான படத்தை எடுத்து இருக்கிறார் தனுஷ். இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் பவிஷ், பார்ப்பதற்கு அப்படியே தனுஷ் போலவே இருக்கிறார். இந்த படம் வரும் பிப்ரவரி 21ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

அனைவருக்கும் பிடிக்கும்: ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து பாடல்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. மேலும், இந்த படத்தைப் பார்த்த, எஸ்.ஜெ சூர்யா படத்தை பார்த்து வெகுவாக பாராட்டி இருந்தார். அதேபோல படத்தை பார்த்த இயக்குனர் மாரி செல்வராஜ், இது ஒரு வழக்கமான காதல் கதையாக இருந்தாலும் இப்படத்தை பார்க்கும்போது ஒரு உற்சாகம் பிறந்தது. அந்த உற்சாகம் இந்த படம் பார்க்கும் அனைவருக்கும் கண்டிப்பாக கிடைக்கும் என்றார். இத்திரைப்படம் தனுஷிற்கு மேலும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இட்லிக்கடை : இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ், இட்லி கடை என்ற படத்தை இயக்கியும், நடித்தும் வருகிறார். இதில் நித்யா மேனன் கதாநாயகியாகவும், அருண்விஜய் வில்லனாகவும் நடிக்கும் இத்திரைப்படத்தில் ராஜ்கிரண் ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனுஷ், சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடிக்க கமிட்டானார். அதில் அவருடன் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X