தனுஷ் அக்கா மகன் படம் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தாய் மாமன்!
சென்னை: தனுஷ் இயக்கத்தில் அவரது அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகவுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படம் இந்த மாதம் ஜனவரி 30ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியான நிலையில், அடுத்த மாதம் தான் ரிலீஸ் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்றுமுன் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகி உள்ள விடாமுயற்சி திரைப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாக உள்ள நிலையில், காதலர் தினத்தை குறிவைத்து காத்திருந்த சில படங்கள் இந்த மாதமே வெளியாக தொடங்கி உள்ளன. ரவியின் காதலிக்க நேரமில்லை, ஆகாஷ் முரளியின் நேசிப்பாயா உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு வெளியான நிலையிலும் ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில், காதலர் தினத்தை டார்கெட் செய்திருந்த நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமும் இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் வெளியாகிறது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ரிலீஸ் எப்போ: நடிகர் தனுஷ் இயக்கத்தில் அவரது அக்கா மகன் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர் உள்ளிட்ட இளைஞர்கள் நடித்துள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி வெளியாகும் என தனுஷ் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அக்கா மகனுக்கு வெற்றி கிடைக்குமா?: மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி அறிமுகமான நேசிப்பாயா படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தார். ஆனால், பொங்கல் விடுமுறையை குறிவைத்து வெளியான நேசிப்பாயா படத்தை நேசிக்க ஆளே இல்லை. இந்நிலையில், தனுஷ் இயக்கத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர் என இளம் பட்டாளம் நடித்துள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் நிலைமை என்னவாகும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. தனுஷ் இயக்கத்தில் வெளியான ப. பாண்டி, ராயன் என இரு படங்களுமே வெற்றிப் பெற்ற நிலையில், இயக்குநராக அவர் ஹாட்ரிக் அடிப்பது உறுதி என்றும் இந்த ஆண்டு இட்லி கடை படமும் அவருக்கு வெற்றிவாகையை சூடும் படமாக அமையும் எனக் கூறுகின்றனர்.
பிரியங்கா மோகனுக்காக: ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள 'கோல்டன் ஸ்பேரோ' பாடலில் மடிசார் கட்டிய மாமியாக பிரியங்கா மோகன் நடனமாடுவதை பார்க்கவே ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தனக்கு ஒரு துள்ளுவதோ இளமை படத்தை அண்ணன் செல்வராகவனும் அப்பா கஸ்தூரி ராஜாவும் கொடுத்தது போல இளமை துள்ளல் உடன் தனது மருமகனுக்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை தனுஷ் தருவார் என்பது உறுதி என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











