Raayan movie: வெளியானது ராயன் படத்தின் வாட்டர் பாக்கெட் பாடல்.. லவ் கானா.. தனுஷ் வெளியிட்ட பதிவு!
சென்னை: நடிகர் தனுஷ் ப பாண்டி படத்தை தொடர்ந்து நீண்ட காலங்களுக்கு பிறகு இயக்குனராக களமிறங்கியுள்ள படம் ராயன். தனுஷின் 51வது படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன். துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டடவர்கள் நடித்துள்ளனர்.
ராயன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி மாஸ் காட்டியது. இந்நிலையில் இன்றைய தினம் ரொமான்டிக் பாடலாக வாட்டர் பாக்கெட் என்ற 2வது சிங்கிள் வெளியாகியுள்ளது. இதில் சந்தீப் கிஷன் மற்றும் அபர்ணா பாலமுரளி இடையிலான கெமிஸ்ட்ரி சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. படம் வரும் ஜூன் மாதம் 13ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராயன். ப பாண்டி படத்தை தொடர்ந்து நீண்ட காலங்களுக்கு பிறகு ராயன் படம் மூலம் மீண்டும் இயக்கத்தை கையில் எடுத்துள்ளார் தனுஷ். இந்த படத்தை கேங்ஸ்டர் கதைகளத்தில் உருவாக்கியுள்ளார். படத்தில் தனுஷுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கடந்து சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்துள்ளது.
2வது சிங்கிள் ரிலீஸ் : இந்நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. வாட்டர் பாக்கெட் என்ற இந்த பாடலின் பிரமோவை முன்னதாக படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்த பாடலில் முக்கியமாக சந்தீப் கிஷன் மற்றும் அபர்ணா பாலமுரளி காணப்படுகின்றனர். அவர்களின் ரொமான்ஸ் இந்த பாடலில் சிறப்பாக அமைந்துள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர். லவ் கானாவாக உருவாகியுள்ள இந்த பாடலை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தனுஷ் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் ரிலீஸ்: வரும் ஜூன் மாதம் 13ம் தேதி ரிலீசாகவுள்ள ராயன் படத்தின் இசை வெளியீடு வரும் ஜூன் மாதம் 1ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் லேசான தலைமுடியுடன் கூடிய கெட்டப்பில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார். அவருக்கு இந்த படத்தில் ஜோடி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக அவரது இயக்கத்தில் வெளியான ப பாண்டி படம், வயதான நபரின் உணர்வுகளை மையமாகக் கொண்டு வெளியாகியிருந்தது. அந்த வகையில் ராயன் படமும் மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த படங்கள்: இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மானின் இசை கூடுதல் பலத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். படத்தின் முதல் பாடலும் சிறப்பான கவனத்தை ஈர்த்த சூழலில் தற்போது வெளியாகி உள்ள வாட்டர் பாக்கெட் என்ற இந்த இரண்டாவது பாடலும் ரசிகர்களை சிறப்பாக கவரும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி வருகிறது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம். இந்தப் படமும் விரைவில் சூட்டிங்கை நிறைவு செய்து இந்த ஆண்டிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











