காலாவுக்கும் ராயன் படத்துக்கும் இப்படியொரு கனெக்‌ஷன் இருக்கா?.. இந்த தடவை மிஸ் ஆகாம இருந்தா சரி!

சென்னை: தனுஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் கடந்த 2018ம் ஆண்டு வெளியானது. கபாலி படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார். அந்த படத்தில் ராமாயணம் கான்செப்ட்டை மறைமுகமாக வைத்தே பா. ரஞ்சித் படத்தை இயக்கி இருந்தார்.

ரஜினிகாந்துக்கு ராவணன் கதாபாத்திரத்தையே கொடுத்திருந்தார். இறுதி கிளைமேக்ஸ் காட்சியில் எல்லாம் இலங்கையை எரிக்கும் காட்சிகளை போல அந்த படம் உருவானது என ஏகப்பட்ட விமர்சனங்களும் எழுந்தன. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் ஓடவில்லை.

Dhanush Raayan Kaala

இந்நிலையில், தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்திலும் தனுஷின் கதாபாத்திரம் கிட்டத்தட்ட ராவணன் கதாபாத்திரத்தை தழுவியே உருவாக்கப்பட்டுள்ளதாகவே கூறுகின்றனர்.

விரைவில் வருகிறான் ராயன்: தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் வரும் ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனுஷின் அண்ணன் செல்வராகவன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ராவணன்: காலா படத்திலேயே ராவணனை ஹீரோவாக காட்டுவதற்கு தான் பா. ரஞ்சித் முயற்சித்திருப்பார். ராமாயணத்தில் ராவணனை வில்லனாக சித்தரித்தது தவறு என்கிற கருத்தை முன் வைத்தே அந்த படத்தை அவர் இயக்கியதாக பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், ராயன் படத்திலும் ராவணன் தான் ஹீரோ என்கிற டீகோட்களை ரசிகர்கள் செய்து வருகின்றனர்.

Dhanush Raayan Kaala

ராயன் குடும்பம்: தனுஷ் தான் ராவணன் என்றும் ராவணனின் தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீபி கிஷன் நடித்துள்ளதாக கூறுகின்றனர். கும்பகர்ணன் போல ஒருவர் சோம்பேறியாகவும் ஆனால், பலமானவராகவும் இருப்பார் என்றும் கூறுகின்றனர். சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் தான் துஷாரா விஜயன் நடித்திருப்பதாகவும் தனுஷ் ராயன் படத்தின் டிரெய்லரில் கதையை ரிவீல் செய்யாமல் விட்டதற்கு காரணமே இந்த ராமாயண கனெக்‌ஷன் தான் என்கின்றனர். அடுத்த வாரம் படம் வெளியான பின்னர் ராயன் படத்தில் தனுஷ் என்ன கிண்டி வைத்திருக்கிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Dhanush Raayan Kaala

பத்து தல: கடந்த ஆண்டு சிம்பு நடித்த பத்து தல படமும் ராவணன் கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் விதமாகவே உருவாகியிருந்தது. படத்தின் டைட்டிலிலும் பத்து தல என்றே வைத்திருந்தனர். ஆனால், அந்த படமும் பெரிதாக வெற்றிப் பெறவில்லை. "அடங்காத அசுரன்" பாடல் எல்லாம் ராயன் படத்தில் இடம்பெற்ற போதே ரசிகர்கள் தனுஷின் கதாபாத்திரம் குறித்து கணித்து விட்டனர். இந்நிலையில், ராயன் படத்தின் ரிசல்ட் எப்படி இருக்கும் என்கிற கேள்விகளும் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளன.

Dhanush Raayan Kaala

ஸ்ட்ரிக்ட்டான டைரக்டர்: தனுஷ் நடிப்பில் அசுரனாக இருந்து வரும் நிலையில், இயக்கத்தில் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டான இயக்குநராக இருந்தார் என படத்தில் பணியாற்றிய நடிகர்களும் நடிகைகளும் பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். மிகப்பெரிய பவர் ஹவுஸ் பெர்ஃபார்மர்கள் ஏ.ஆர். ரஹ்மான் இசை என ஏகப்பட்ட பலம் இந்த ராயன் படத்திற்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X