Raayan movie: ராயனும் வருவான் தீயா.. மிரட்டும் புதிய போஸ்டரை வெளியிட்ட ராயன் படக்குழு!
சென்னை: நடிகர் தனுஷ் ப பாண்டி படத்தை தொடர்ந்து தற்போது ராயன் படத்தை இயக்கி முடித்துள்ளார். முதல் படத்தைப் போலவே இந்த படத்திலும் தனுஷ் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் குடும்ப சென்டிமெண்டையும் இணைத்து இந்த படத்தின் கதை உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வடசென்னையை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களத்தை தனுஷ் உருவாக்கியுள்ள நிலையில் படத்தில் சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளனர். படம் அடுத்த மாதம் 26ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராயன். படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே நிறைவடைந்த நிலையில் படத்தின் ரிலீஸ் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே திட்டமிடப்பட்டது. தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் ஜூன் மாதத்திற்கு திட்டமிடப்பட்ட நிலையில் அதிலும் தாமதம் ஏற்பட்டு தற்போது ஜூலை மாதம் 26ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ப பாண்டி படத்தை தொடர்ந்து நீண்ட காலங்களுக்கு பிறகு தனுஷ் இயக்கியுள்ளார்.
தனுஷ் இயக்கம்: தன்னுடைய ப பாண்டி படத்தில் வயதான நபரின் வாழ்க்கை முறை அவரது இறந்த காலத்து காதல் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்தி தன்னுடைய அறிமுக இயக்கத்திலேயே மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தார் தனுஷ். இந்த படத்தில் அவர் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் கேமியோ கேரக்டரிலும் நடித்திருந்தார். இந்நிலையில் தொடர்ந்து பிஸியாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வந்த தனுஷ் இடையில் தனக்கான விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக இடைவெளி எடுத்துக்கொண்டு ராயன் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
ராயன் படம்: வடசென்னையை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ராயன் படத்தில் தனுஷுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தின் பாடல்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள சூழலில் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏஆர் ரஹ்மான் இசையில் இந்த படத்தின் அதிரடி மற்றும் மெலடி பாடல்கள் வெளியாகி உள்ள சூழலில் ஜூலை மாதம் முதல் வாரத்தில் படத்தின் இசை வெளியீடு நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புதிய போஸ்டர்: இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த போஸ்டரை தயாரிப்பு தரப்பான சன் பிக்சர்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் மாவு மில்லில் மிகவும் கோபமான பார்வையை வெளிப்படுத்திய வண்ணம் நிற்பதாக காணப்படுகிறது. இந்தப் படத்தில் உணவு கடை நடத்தி வருபவர்களாக தனுஷ் மற்றும் குடும்பத்தினர் காணப்படுகின்றனர். இதையொட்டி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியான நிலையில், குடும்ப செண்டிமெண்டையும் இணைத்து இந்த படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











