Actor Dhanush: இன்று மாலை வெளியாகும் ராயன் பட அறிவிப்பு.. தனுஷ் குதூகலம்!
சென்னை: நடிகர் தனுஷ் ப பாண்டி படத்திற்கு பிறகு தற்போது அடுத்தடுத்து இரு படங்களை இயக்கியுள்ளார். ராயன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என இரு படங்களை அவர் இயக்கியுள்ள சூழலில், இதில் ராயன் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட சூழலில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் இந்தப் படம் ஜூன் அல்லது ஜூலையில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகவுள்ளதாக தனுஷ் மற்றும் சன் பிக்சர்ஸ் தங்களது எக்ஸ் தள பக்கங்களில் அறிவித்துள்ளனர்.

ராயன் படம்: நடிகர் தனுஷ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ், அபர்ணா தாஸ், துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் ராயன். இந்தப் படத்தை தன்னுடைய ப பாண்டி படத்திற்கு பிறகு நீண்ட காலங்கள் கழித்து இயக்கி முடித்துள்ளார் தனுஷ். படத்தின் சூட்டிங் முன்னதாகவே நிறைவடைந்த சூழலில் படம் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளிப் போனது. இந்நிலையில் படம் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தள்ளிப்போன ராயன் ரிலீஸ்: கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் ஜூன் மாதத்தில் ரிலீசாகவுள்ளதால், ராயன் படம் ஜூலை மாதத்திற்கு ரிலீஸ் தள்ளிப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதால் ராயன் படம் ஜூன் மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை இந்தப்படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளதாக தனுஷ் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது எக்ஸ் தள பக்கங்களில் தெரிவித்துள்ளனர். இது இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேங்ஸ்டர் கதைக்களம்: ராயன் படத்தை வட சென்னையை மையமாக கொண்டு கேங்ஸ்டர் படமாக உருவாக்கியுள்ளார் தனுஷ். இந்தப் படத்தில் தள்ளுவண்டி உணவுக்கடையை வைத்து அவர் நடத்தி வருவதாக முன்னதாக வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் காணப்பட்டது. தனுஷின் தம்பிகளக சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் இருவரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் துஷாரா விஜயன், அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட நடிகைகள் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.
குபேரா படத்தில் தனுஷ்: தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதனிடையே தன்னுடைய இயக்கம் + நடிப்பு மற்றும் தயாரிப்பில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தையும் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முற்றிலும் இளைஞர்களை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகிவருவதாகவும் படத்தில் தனுஷ் மற்றும் சரத்குமார் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டிலேயே இந்தப் படமும் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











