ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் தனுஷின் ராயன்.. இதுவரை எத்தனை கோடி?

சென்னை: தனுஷின் 50வது திரைப்படமான ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் தனுஷூடன் இணைந்து எஸ்ஜே சூர்யா, செல்வ ராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா முரளி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் 26 ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், இன்று முதல் ப்ரீ புக்கிங் தொடங்கி உள்ளது.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவராக தமிழ் சினிமாவில் மாஸ்காட்டி வருகிறார் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் இவர் ஹீரோவாக அறிமுகமான போது, இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா என கேலி செய்தவர்களுக்கு தனது அசுரத்தனமான நடிப்பின் மூலம் பதிலடி கொடுத்து இன்று ஹாலிவுட் வரை தனது புகழை பரப்பி உள்ளார்.

dhanush Raayan pre booking

நடிகர் தனுஷ்: பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படத்தில் நடிப்பின் அசுரனாக தன்னை நிலை நிறுத்திக்கொண்ட தனுஷ், பா.பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்ககுனராக அறிமுகமானார். ராஜ்கிரண், ரேவதி, தனுஷ், மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது, ராயன் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் தனுஷூடன், வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், அபர்னா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹிட் பாடல்: ராயன் படத்திலிருந்து ஏ,ஆர்.ரஹ்மான் இசையில் 5 பாடல் இடம் பெற்று இருக்கும் நிலையில். இப்படத்தில் இருந்து வெளியான அடங்காத அசுரன், வாட்டர் பாக்கெட் மூஞ்சு, ராயன் ரம்பல் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வாட்டர் பாக்கெட் பாடல் ரசிகர்களின் மோஸ்ட் ஃபேவரைட் பாடலாக அமைந்தது. கானா பாடல் வடிவில் இந்த பாடல் அமைந்ததால் மக்கள் மத்தியில் எளிதில் சென்றடைந்தது. இசை வெளியீட்டு விழாவின் போது அடங்காத அசுரன் பாடலை மேடையில் ஏஆர் ரஹ்மானும், தனுஷூம் பாடி அசத்தினார்கள்.

படத்தின் கதை: இப்படி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக இருக்கும் ராயன் படத்தின் கதை குறித்து இணையத்தில் தகவல் கசிந்தன. இப்படத்தில் தனுஷ் ஒரு போலீஸ் இன்பார்மராக நடித்து இருப்பதாகவும், வில்லன் ஏரியாவில் தனது சகோதரர்கள், சகோதரிகளுடன் ஓட்டலை நடத்திக்கொண்டு வருகிறார். இப்படி அமைதி வாழ்க்கை போய் கொண்டு இருக்கும் போது தான், தனுஷ் ஓட்டலை மட்டும் நடத்தவில்லை, யாருக்கும் தெரியாமல் வில்லன்கள் குறித்த தகவலை போலீசுக்கு தெரிவித்து வருகிறார் என்கிற விஷயம் வில்லனுக்கு தெரியவர, அவரை குடும்பத்தோடு தீர்த்துக்கட்ட வில்லன் திட்டம் போட, தனுஷ் தனது சகோதர்களை வைத்து எப்படி வில்லனை எதிர்த்தார் என்பது தான் ராயன் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இணையத்தில் லீக்கான படத்தின் கதையால் படத்தின் மீதான ஆர்வம் மேலும் அதிகமாகி உள்ளது.

ராயன் ப்ரீ புக்கிங் வசூல்: இந்நிலையில், இன்று முதல் ராயன் படத்திற்கான ப்ரீ புக்கிங் தொடங்கி உள்ளது. தற்போது இதுவரை உலகளவில் ரூ. 1.5 கோடிக்கும் மேல் ராயன் படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ப்ரீ புக்கிங்கிலேயே இந்த படத்திற்கு இவ்வளவு மாஸான வரவேற்பு கிடைத்துள்ளதால், ராயன் படம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X