ராயன் டிரெய்லர் வெளியானது.. 50வது படத்துக்கு விஸ்வரூபம் எடுத்த தனுஷ்.. சும்மா மிரட்டுது!
சென்னை: நடிகர் தனுஷின் 50வது படமாக ராயன் உருவாகி உள்ளது. அதன் டிரெய்லர் தற்போது வெளியானது. அந்த படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ளார். ராயன் படத்தில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா, காளிதாஸ் ஜெயராம், வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
வண்டி செட்டப்பில் உள்ள உணவுக்கடை நடத்தும் நபர்கள் கைகளில் ரத்தக்கறை படிந்த ஆயுதங்கள் இருப்பது போல செம டெரராக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே மிரட்டின. தனுஷ் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள நிலையில், இந்த படத்தின் கதை அவருடைய அண்ணன் செல்வராகவன் கதை என தகவல்கள் பரவின. ஆனால், அதற்கு செல்வராகவன் இது முழுக்க முழுக்க தனுஷ் படம் தான் என்றார்.

ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 26ம் தேதி ராயன் திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது.
தனுஷ் 50: அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் அண்ணன் செல்வராகவன் எழுதிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கடந்த 2002ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் தனுஷ். அந்த படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் எழுதி இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் மயக்கம் என்ன, நானே வருவேன் உள்ளிட்ட பல படங்களில் தனுஷ் நடித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்கள் தனுஷை நடிகராகவும் அவருக்குள் இயக்குநராகும் எண்ணத்தையும் நன்றாக வளர்த்த நிலையில், தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்திருக்கிறார்.
ராயன் டிரெய்லர்: இந்த படத்தில் தனுஷ் கேங்ஸ்டராக நடித்துள்ளார் என படத்தின் போஸ்டர்கள் வெளியானதும் ரசிகர்கள் கெஸ் செய்தார்கள். ஆனால், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்ட மூவருக்கும் அண்ணனாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது வெளியாகி உள்ள டிரெய்லர் தாறுமாறாக தெறிக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி கூஸ்பம்ப்ஸ் ஆக்கிய நிலையில், பிஜிஎம் டிரெய்லரில் தரமான சம்பவத்தை செய்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் 'ஏ' சான்றிதழ் படமாகவே வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பேய் மாறி வருவான்: ராயா காட்டில் ஆபத்தான மிருகம் எது என செல்வராகவன் தனுஷை பார்த்து கேட்பது போல டிரெய்லர் ஆரம்பிக்கிறது. அதற்கு சிங்கம் தான் என ராயன் சொல்ல, அது இல்லை. சிங்கம் வலிமையான மிருகம். ஆனால், ஆபத்தான மிருகம் ஓநாய் தான். அது ஸ்கெட்ச் போட்டு சிங்கத்தையே சாகடிச்சிடும் என்கிறார். ராயனுக்கு கொடுக்கும் பில்டப்புகளை பார்த்து விட்டு எஸ்.ஜே. சூர்யா அவன் ஆம்பளையா இருந்தா இங்க வந்து போட சொல்லு என எஸ்.ஜே. சூர்யா சொல்ல, பேய் மாறி வருவான் என வசனம் வரும் இடங்களில் எல்லாம் டிரெய்லர் தெறி மாஸாக உள்ளது.
உண்மையை சொன்னேன்: டிரெய்லர் இறுதியில் போலீஸ் ஸ்டேஷனில் என்ன சொன்ன வாபஸ் வாங்கிட்டானுங்க என கேட்டதும், பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் சொல்வது போல "உண்மையை சொன்னேன்" என தனுஷ் சொல்லிவிடுவாரோ என நினைத்த ரசிகர்களுக்கு, "கெஞ்சிக் கேட்டேன்" என அவர் சொல்லும் இடம் ராயன் நிச்சயம் வெல்வான் என்கிற நம்பிக்கையை கொடுக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான கேப்டன் மில்லர் மிஸ் ஆன நிலையில், ராயன் படத்தின் மூலம் தனுஷ் தரமான கம்பேக் கொடுப்பார் என்றும் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா ஓடியதை போலவே ராயன் படமும் பந்தயம் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











