தனுஷின் ராயன் படத்தில் இப்படி ஒரு விஷயம் இருக்கா… அடடே ஓடி வந்து நன்றி சொன்ன சகோதரி!

சென்னை: நடிகர் தனுஷ் இயக்கி நடித்த திரைப்படம் ராயன், இந்த படம் கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதாக பல கருத்துக்கள் வெளியானாலும் படம் கணிசமான வசூலை பெற்று வருகிறது. அந்த வகையில், இந்த படத்தில் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது

நடிகர் தனுஷ் ஏற்கனவே ப பாண்டி என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். அந்த படத்தில் தனுஷ், ராஜ்கிரண், ரேவதி,மரியா செபாஸ்டின், பிரசாந்த் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தைத் தொடர்ந்து, தனது ஐம்பதாவது படமாக உருவான ராயன் படத்தை தானே இயக்கி நடித்து வெளியிட்டார். இந்த படத்தில் தனுஷூடன் சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

Dhanush Raayan

நடிகர் தனுஷ்: தனது குடும்பத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அண்ணன் ரோலில் ஒரு நிறைவான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ரத்தம், வெட்டு, குத்து என ஒரே வன்முறையான இருப்பதாகவும், ப பாண்டி போல ஒரு படத்தை எடுத்த தனுஷ், இப்படி வன்முறை வெறியாட்டமான படத்தை ஏன் எடுத்தார் என பல கமெண்டுகள் வந்தன. ஆனால், அவை அனைத்தையும் தாண்டி படம் நன்றாக கல்லாக்காட்டியது. படம் வெற்றி பெற்றதை தனுஷ் விருந்து வைத்து கொண்டாடினார்.

நன்றி சொன்ன சகோதரி: இந்நிலையில், தற்போது படம் குறித்து ஒரு சுவாரசியத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, காவல்துறை அதிகாரியாக வரும் பிரகாஷ்ராஜ் உடன் இணைந்து ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் டாக்டர் கார்த்திக் ஆஞ்சநேயன். இவர் வேறு யாரும் அல்ல தனுஷின் சகோதரி கார்த்திகா தேவியின் கணவர் தான். பிரபல இதய அறுவை சிகிச்சை மருத்துவரான இவரை, தனுஷ் ராயன் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க வைத்து இருக்கிறார்.

ஒரு வருடம் காத்திருந்தேன்: தனது கணவரை ஒரு நடிகராக மாற்றிய தனது சகோதரர் தனுஷிற்கு அவரது சகோதரி நன்றி தெரிவித்து சோசியல் மீடியாவில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில்,என்னிடமிருந்த இந்த புகைப்படங்களை வெளியிட்டு என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக ஒரு வருடமாக நான் காத்திருந்தேன். ஒரு இதய சிகிச்சை மருத்துவராக டாக்டர் கார்த்திக் ஆஞ்சநேயாவின் திறமைகள் நன்கு தெரியும். ஆனால் அவருக்குள் ஒரு நடிகர் இருக்கிறார் என தனுஷ் எப்படி கண்டுபிடித்தார் என்பதும் தனது ஐம்பதாவது படத்தில் அவருக்கு ஒரு சிறிய கதாபாத்திரம் இருக்கிறது என்று கூறி நடிக்க அழைத்தபோதும் எனக்கு வியப்பாக இருந்தது.

நல்ல நடித்து இருக்கிறார்: தனுஷ் மற்ற நடிகர்களை படப்பிடிப்பு தளத்தில் வேலை வாங்குவதை நான் பார்த்திருக்கிறேன். அதேசமயம் எனது கணவரையும் ஒரு நடிகராக மாற்றியதை பார்த்து பிரமித்து விட்டேன். படத்தில் எனது கணவர் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார் என நான் நினைக்கிறேன். தனுஷ் இயக்கிய அதுவும் அவரது ஐம்பதாவது படத்தில் இப்படி ஒரு வாய்ப்பை அவருக்கு கொடுத்ததற்காக தனுஷிற்கு நன்றி சொல்வதற்கு எனக்கு வார்த்தைகளே இல்லை. ஒரு சகோதரியாகவும் மனைவியாகவும் இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X