தனுஷின் மகன்கள் என்னமா வளர்ந்துட்டாங்க.. தம்பியின் கையை புடிச்சிக்கிட்டு எங்க போறாரு!
சென்னை: நடிகர் தனுஷூம் ஐஸ்வர்யாவும் விவகாரத்து பெற்று பிரிந்து இருந்தாலும், இருவருமே நேரம் கிடைக்கும் போதெல்லாம் மகன்களுடனே இருந்து வருகின்றனர். சிறுவர்களாக இருந்த யாத்ரா, லிங்கா இருவருமே தற்போது வளர்ந்து பெரியவர்களாகி விட்டார்கள். தற்போது தனுஷின் மகன்களின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள், தனுஷின் மகன் என்னமா வளர்ந்துவிட்டார்கள் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும் நடிகருமான தனுஷும் காதலித்து வந்தனர். இதையடுத்து, பெற்றோரின் சம்மதத்துடன் 2004 ஆம் ஆண்டு சென்னையில் திரைபிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் தடபுடலாக திருமணம் நடந்தது. நட்சத்திர தம்பதிகளான இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் பிறந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறு பாடு ஏற்பட்டு இருவரும் 2021 ஆம் ஆண்டு முதல் தனித்தனியாக வாழ்த்து வந்தனர். இருவரும் சேர்ந்து வாழ ரஜினி பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், எதுவும் ஒத்துவராததால் 2024 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

நடிகர் தனுஷின் மகன்: இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தாலும் இரு மகன்களும் அப்பா, அம்மா இருவருடனே பெரும்பாலும் இருக்கிறார்கள். தனுஷ் எவ்வளவு தான் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், மகன்களுடன் நேரத்தை செலவிடுவதை மறந்தது இல்லை. அதே போல ஐஸ்வர்யாவும் மகன்களுடன் இருக்கிறார். கடந்த ஆண்டு யாத்ரா, உயர்கல்வியை முடித்தார். இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் தனுஷூம் ஐஸ்வர்யாவும் ஒன்றாக கலந்து கொண்டனர். என்னதான் கணவன் மனைவிக்குள் கருத்துவேறுபாடு இருந்தாலும், அது குழந்தைகளை பாதிக்கக்கூடாது என்பதில் இருவரும் உறுதியாக உள்ளனர். அதற்கு தகுந்தார் போல இரண்டு மகன்களும் பண்போடு நடந்து கொள்கின்றனர். இது உண்மையில் பராட்டக்கூடிய விஷயம் தான்.
எங்க போறாரு: இந்நிலையில் இணையத்தில் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் சென்னை விமான நிலையத்திற்கு வரும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் யாத்ரா தனது தம்பி லிங்காவின் கைபிடித்து அழைத்து செல்கிறார். மேலும், பாதுகாவலர்களை கட்டிப்பிடித்து விடைபெறுகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள், தனுஷின் மகன்கள் என்னமா வளர்ந்துட்டாங்க என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











