இட்லி கடை போல இருக்காது.. தனுஷின் இந்தி படம் அட்வான்ஸ் புக்கிங்கே இத்தனை கோடியா?.. முதல் நாள் வசூல்?

மும்பை: ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் நடிகர் தனுஷ் கடந்த 2013ம் ஆண்டு முதல் முறையாக இந்தியில் வெளியான ராஞ்சனா (அம்பிகாபதி) படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் நாளே அந்த படம் பாலிவுட்டில் 5 கோடி வசூலை ஈட்டி பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்தது.

கோலிவுட்டில் இருந்து ஒரு நடிகர் பாலிவுட்டுக்கு சென்று நடித்த முதல் இந்தி படம் சுமார் 100 கோடி வசூலை உலகளவில் ஈட்டி சாதனை படைத்தது. அந்த படத்தைத் தொடர்ந்து அமிதாப் பச்சன் உடன் இணைந்து பால்கி இயக்கத்தில் ஷமிதாப் படத்தில் நடித்தார் தனுஷ்.

Dhanush s Tere Ishk Mein Advance Ticket sale profit is very huge Day 1 Box Office prediction is here
Photo Credit:

மீண்டும் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், சாரா அலி கான் உடன் இணைந்து தனுஷ் அட்ரங்கி ரே திரைப்படத்திலும் நடித்தார். இந்நிலையில், 3வது முறையாக ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'தேரே இஷ்க் மே' திரைப்படம் நவம்பர் 28ம் தேதி திரைக்கு வருகிறது. ஏற்கனவே இந்தி ரசிகர்கள் டிக்கெட் புக்கிங்கில் சம்பவம் செய்து வரும் நிலையில், முதல் நாள் ஓபனிங் எப்படி இருக்கும் என்பது குறித்த கணிப்பை இங்கே பார்க்கலாம் வாங்க..

ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட்: நடிகர் தனுஷ் கோலிவுட்டை தாண்டி ஹாலிவுட், பாலிவுட் மற்றும் டோலிவுட் என தனது சிறகுகளை விரித்து பான் வேர்ல்ட் நடிகராகவே மாறிவிட்டார். இந்த ஆண்டு தெலுங்கு இயக்குநரான சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியான குபேரா திரைப்படம் தமிழ்நாட்டை விட ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலேயே சிறப்பாக ஓடி 100 கோடி வசூல் ஈட்டியது. இந்நிலையில், அடுத்ததாக இந்தியில் உருவாகியுள்ள தேரே இஷ்க் மே படமும் 100 கோடி வசூலை தாண்டி 200 கோடி வரை பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை 5 கோடி வசூல்: நாளை படம் வெளியாகவுள்ள நிலையில், வியாழக்கிழமையான இன்று காலை வரை அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங்கில் தனுஷின் தேரே இஷ்க் மே திரைப்படம் 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், ராஞ்சனா படத்தை விட 3 மடங்கு அளவுக்கு முதல் நாள் ஓபனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நாள் வசூல் கணிப்பு: இன்று இரவுக்குள் தேரே இஷ்க் மே அட்வான்ஸ் புக்கிங் 8 கோடிக்கும் மேல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 28ம் தேதி படம் வெளியாகும் நிலையில், தனுஷ், க்ரித்தி சனோன் நடித்துள்ள இந்த இந்தி படம் அதிகபட்சமாக முதல் நாளில் 15 கோடி ரூபாய் அளவுக்கு இந்தி பெல்ட்டில் மட்டும் வசூலை ஈட்டும் என முதற்கட்ட கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. உலகளவில் 30 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இட்லி கடை, குபேரா முதல் நாள் வசூல்: குபேரா திரைப்படம் முதல் நாளில் உலகளவில் 25 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இட்லி கடை திரைப்படம் 16 கோடி ரூபாய் வசூலை உலகளவில் முதல் நாளில் ஈட்டியதாக சாக்னிக் வெப்சைட் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. பிரதீப் ரங்கநாதன் மற்றும் தனுஷ் இருவருமே இந்த ஆண்டு 3 படங்களை ரிலீஸ் செய்து அதிக வசூலை இந்திய பாக்ஸ் ஆபீஸுக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X