அப்போது அந்தச் சிக்கல்.. 10 வருடத்துக்குப் பிறகு சினிமாவுக்கு மீண்டும் வந்த பிரபல ஹீரோயின்!

By

சென்னை: பத்து வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த பிரபல நடிகை, இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

தமிழில், திருடி, வீரமும் ஈரமும் படங்களில் நடித்தவர், மலையாள நடிகை தன்யா மேரி வர்கீஸ்.

பின் மலையாள படங்களில் கவனம் செலுத்திய அவர், தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை.

கட்டுமான நிறுவனம்

கட்டுமான நிறுவனம்

அங்கு ரெட்சில்லீஸ், கேரளா கபே உட்பட பல படங்களில் நடித்தார். 2012 ஆம் ஆண்டு ஜான் என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜோகன் என்ற மகன் இருக்கிறார். ஜான் குடும்பத்தினர் திருவனந்தபுரத்தில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்கள். அதில் தன்யா இயக்குனராக இருந்தார்.

வசூல் செய்தனர்

வசூல் செய்தனர்

திருவனந்தபுரத்தின் பல இடங்களில் இவர்கள் நிறுவனம் சார்பில் கடந்த 2011 ஆம் வருடம் வீடுகள் கட்டிக்கொடுப்பதாக அறிவித்தனர். அதன்படி, 20 தனி வீடுகள் மற்றும் 500 அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை செய்ய இருப்பதாகவும், அதை 2 ஆண்டுகளில் ஒப்படைப்பதாகவும் சொல்லி ரூ.100 கோடி வசூல் செய்தனர்.

நெருக்கடி கைது

நெருக்கடி கைது

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வீடுகளை வழங்கவில்லை. பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதனால் நடிகை தன்யா மற்றும் ஜான் குடும்பத்தினர் தலைமறைவானார்கள். பின்னர் தன்யா உள்ளிட்ட 3 பேரை போலீசார், நாகர்கோவிலில் கைது செய்தனர். இந்தச் சம்பவம் 2016 ஆம் ஆண்டு நடந்தது.

தற்கொலை முடிவு

தற்கொலை முடிவு

இதற்கிடையே, அந்தப் பிரச்னையில் இருந்து மீண்டு வந்த தன்யா, டிவி தொடரில் நடிக்கத் தொடங்கினார். அப்போது, 'நான் கற்பனை கூட செய்துபார்க்க முடியாத நிகழ்வுகள் என் வாழ்க்கையில் நடந்துவிட்டன. தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் இருந்தேன்' என்று கூறியிருந்தார்.

டோவினோவின் கானேகானே

டோவினோவின் கானேகானே

இந்நிலையில், 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார் தன்யா. கானேகானே (Kaanekkaane) என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதில் டோவினோ தாமஸ், ஐஸ்வர்யா லட்சுமி ஜோடியாக நடிக்கின்றனர்.

உற்சாகமாக இருக்கிறது

உற்சாகமாக இருக்கிறது

'பத்து வருடத்துக்குப் பிறகு கேமரா முன் வருவது உற்சாகமாக இருக்கிறது. இதற்கு முன் மோகன்லாலின் பிரணயம் படத்தில் அவர் மகளாக நடித்திருந்தேன். கானேகானே படத்தில் சின்ன கேரக்டரில் நடிக்கிறேன். இதை 'உயிரே' மனு அசோகன் இயக்குகிறார்' என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளார், தன்யா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X