நகைச்சுவையை தாராளமாக தரும் தாராள பிரபு.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: ஹரீஷ் கல்யாணின் தாராளப் பிரபு வரும் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஹரீஷ் கல்யாண், தான்யா ஹோப் மற்றும் விவேக் நடித்து இருக்கும் திரைப்படம் தாராளப் பிரபு. இதனை அறிமுக இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார், இப்படம் விக்கி டோனார் என்ற பாலிவுட் படத்தின் ரீமேக் ஆகும்.

 Dharala prabhu release date announced

தமிழ் சினிமாவில் முதல் முறையாக இந்த படத்திற்கு எட்டு இசை அமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர். அனிருத் ஆரம்பித்து தற்போது டிரெண்டிங்கில் உள்ள விவேக் மற்றும் மேர்வின் வரை பலரும் இசை அமைத்துள்ளனர் குறிப்பாக பல இளம் மற்றும் அறிமுக இசை அமைப்பாளர்களுக்கு இதில் வாய்ப்பு வழங்கி கௌரவித்து உள்ளனர்.

 Dharala prabhu release date announced

படத்தின் பாடல்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது, கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் ஹரீஷ் கல்யாண் ஒரு ஸ்பெர்ம் டோனராக நடித்துள்ளார். இது போன்ற படங்கள் தமிழுக்கு மிகவும் புதுசாகும் ஆனால் படத்தில் பேசப்பட்டிருக்கும் விசயம் புதிதல்ல ஏனெனில் சமூகத்தில் பலரும் ஸ்பெர்ம் டோனர்களால் குழந்தை பெற்று தான் வருகிறார்கள்.

 Dharala prabhu release date announced

மேலும் தாராள பிரபு படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது, நகைச்சுவையை செமயாக கொடுத்துள்ளார் ஹரீஸ் கல்யாண். தாராள பிரபு படம் நடிகர் ஹரீஸ் கல்யாணுக்கு மிக பெரிய திருப்புமுனை படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியில் இந்த விக்கி டோனார் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் சாதனையும் புரிந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X