தனுஷ் ரெஃபரன்ஸ் வைத்த ஹரிஷ் கல்யாண்.. தாராள பிரபு டீசர் ரிலீஸ்.. ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை: ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் தாராள பிரபு படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
ஸ்க்ரீன் சீன் மீடியா தயாரிப்பில் உருவாகி உள்ள தாராள பிரபு படத்தை இயக்குநர் கிருஷ்ணா மாரி முத்து இயக்கி வருகிறார்.
பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த விக்கி டோனர் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இந்த படம் உருவாகி வருகிறது.

அடல்ட் கதை
சிந்து சமவெளி, பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே என தொடர்ந்து அடல்ட் கதைகளை கொண்ட படங்களில் நடித்து வரும் பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் தான் தாராள பிரபு. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, குழந்தை கொடுக்கும் தாராள பிரபுவாக ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார்.

தன்யா ஹோப்
ஒவ்வொரு படத்திலும் புது புது ஹீரோயின்களை இறக்கி நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், தாராள பிரபு படத்தில் தன்யா ஹோப் உடன் நடித்து வருகிறார். 2015ம் ஆண்டு மிஸ் இந்தியா கொல்கத்தா டைட்டில் வென்ற தன்யா ஹோப், கடந்த ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

விவேக்
ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் நடித்துள்ளார். பாலிவுட்டில் வெளியான விக்கி டோனர் படத்தில் அன்னு கபூர் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் விவேக் நடித்து அசத்தியுள்ளார். ஸ்பெர்ம் பேங்க் வைத்து நடத்துபவராக விவேக் இந்த படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

8 இசையமைப்பாளர்கள்
தமிழ் சினிமாவில் முதன்முறையாக தாராள பிரபு படத்திற்கு 8 பிரபல இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர், பரத் சங்கர், இன்னோ கெங்கா, கபீர் வாசுகி, மேட்லி ப்ளூஸ், ஊர்கா - தி பேண்ட், ஷான் ரோல்டன் மற்றும் விவேக் - மெர்வின் ஜோடி இசையமைத்து வருகின்றனர். இதனால், தாராள பிரபு படத்தின் பாடல்கள் செம்ம ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாராள பிரபு டீசர்
கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், தன்ய ஹோப், விவேக் நடிப்பில் உருவாகியுள்ள தாராள பிரபு படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. விவேக் சாமி கும்பிடும் விதமாக தொடங்கும் இந்த டீசர், ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு ஆட்டத்துடன் அட்டகாசமாக நிறைவடைகிறது.

தனுஷ் ரெஃபரன்ஸ்
நடிகர் ஹரிஷ் கல்யாண் தனுஷின் தீவிர ரசிகராக இருக்க வேண்டும். தனுசு ராசி நேயர்களே என போன படத்தில் டைட்டிலிலேயே தனுஷ் ரெஃபரன்ஸ் வைத்த ஹரிஷ் கல்யாண், தாராள பிரபு டீசரில் தனுஷ் மாதிரி நடிக்கணும் என பிறக்கப் போகும் குழந்தை குறித்து ஒரு தம்பதி கேட்கும் வசனத்தை வைத்துள்ளார். இதனால், இந்த டீசரை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











