“தாராள பிரபு“ முதல் வீடியோ பாடல்.. சோனி மியூசிக் வெளியிட்டது !
சென்னை : தாராள பிரபு படத்தின் வீடியோ பாடலை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சமீபத்திய சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹரீஸ் கல்யாண் நடித்திருக்கும் படம் தான் தாராள பிரபு. இந்த படம் 2012ல் ஹிந்தியில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த படமான விக்கி டோனர் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும் .

இந்த படத்தில் ஹரீஸ் கல்யாணுடன் பத்மஶ்ரீ விவேக் மற்றும் தான்யா ஹோப் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியாகி விட்டது. இதனிடையே தாராள பிரபு படத்தின் வீடியோ பாடலை தற்போது சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த படத்தின் கதை விக்கி டோனர் படத்தை பார்த்த அனைவருக்கும் தெரியும் இருந்தாலும் படத்தின் கதை சுருக்கத்தை சொல்வது போல இந்த பாடல் அமைந்திருக்கிறது. பிள்ளை பெற முடியாதவர்கள் ஒன்று பிள்ளை தந்து எடுத்து கொள்வார்கள் அல்லது பிள்ளைகளை ஸ்பெர்ம் டோனர்கள் மூலம் பெற்று கொள்வார்கள். இந்த படத்தில் ஒரு ஸ்பெர்ம் டோனராக நடித்து இருக்கிறார் ஹரீஸ் கல்யாண்.

தாராள பிரபு படத்தில் ஹரீஸ் கல்யாண் டோனராகவும் விவேக் டாக்டராகவும் நடித்து இருக்கின்றனர். இந்த பாடலில் டாக்டர் விவேக் மூலம் நாயகன் அதிகபடியான பணத்தை சம்பாதிக்கிறான். இருந்தும் நாயகன் மூலம் பலரும் குழந்தை பெற்று கொள்வதால் அவனை அவனே தாராள பிரபு என்று புகழ்ந்து பாடும் பாடலே தாராள பிரபு பாடல்.
இந்த பாடலுக்கு இசையமைத்து இருக்கின்றனர் ஊர்கா என்ற இசை குழு. இந்த பாடலை எழுதி பாடியிருக்கிறார் பரத் சங்கர். பாடலில் கடவுள் கொடுக்காத வரத்தை அள்ளி தருபவனே தாராள பிரபு என்பது போல வரிகள் அமைந்திருக்கிறது. பாடலின் வரிகளும் இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது .

ஹரீஸ் கல்யாணின் முந்தைய படமான தனுசு ராசி நேயர்களே படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறாத காராணத்தால் இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கிறார் ஹரீஸ் கல்யாண். இந்த படத்திற்கு பிறகு தெலுங்கில் மிக பெரிய வெற்றி அடைந்த பெல்லி சூப்லு படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் .


Click it and Unblock the Notifications











