தில்... தூள்... ராஸ்கல்

By Siva

சென்னை: தரணி, விக்ரம் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக ஒன்று சேர்ந்துள்ளது.

இயக்குனர் தரணி விக்ரம் கூட்டணி வெற்றிக் கூட்டணி ஆகும். அவர்கள் ஏற்கனவே சேர்ந்து பணியாற்றிய தில், தூள் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாகின. விக்ரமின் சினிமா வாழ்வில் இந்த படங்களுக்கு முக்கிய இடம் உண்டு.

தூள் படத்தை அடுத்து தரணி விஜய்யை வைத்து எடுத்த கில்லியும் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அவர் எடுத்த தமிழ் படங்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

குருவி

குருவி

மொக்கை என்றால் மொக்கை கொடூர மொக்கைப் படமாக அமைந்தது குருவி. இதில் கில்லியில் கலக்கிய விஜய், த்ரிஷா ஜோடி நடித்தது.

ஒஸ்தி படுத்துக் கொண்டது

ஒஸ்தி படுத்துக் கொண்டது

இந்தியில் சல்மான் கான் நடிப்பில் வெளியான தபாங் படத்தை தரணி தமிழில் சிம்புவை வைத்து ஒஸ்தி என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஆனால் படம் பப்படமாகிவிட்டது.

ராஸ்கல்

ராஸ்கல்

தரணி விக்ரமுடன் 3வது முறையாக இணைகிறார். அந்த படத்திற்கு ராஸ்கல் என்று பெயர் வைத்துள்ளனர். ஐ படத்தை முடித்தவுடன் விக்ரம் ராஸ்கலில் நடிக்கிறார்.

'ல்' சென்டிமென்ட்

'ல்' சென்டிமென்ட்

விக்ரம், தரணி சேர்ந்த படங்களின் பெயர்கள் ல், ள் ஆகிய எழுத்துக்களில் முடிந்தது. தற்போது சேரும் படமும் 'ல்' என்ற எழுத்தில் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X